பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

‘அவன் உவகை இவன் அல்லல்' ஆதல் ஆகாது என்பாராய் உவகையை ‘அல்லல் நீத்த உவகை' என்றார். உவகை இருபாலும் இல்லை யேல் அஃது உவகையன்றாம். பாலியல் உவகைக்கும் இவ் விருபால் ஒப்பும் இருத்தலைக் கருதியே "உருவு, நிறுத்த காமவாயில்" என்றவர் தொல் காப்பியர் என்பதை எண்ணின் விளக்கமாம். இந் நாள் மருத்துவ அறிவியல் இதனை வலியுறுத்தி ஆய்வு மேற்கொள்ளச் சொல்லுதல் தொல்காப்பிய அறிவர்தம் மேம்பாட்டு விளக்கம் (1219).

செல்வ உவகை பரம்பரை உடல் நிறத்தையே மாற்றிவிடுதல் கண்கூடு. புலன் என்பது புலமை அன்று; கல்விப்புலமை பெருமிதச் சுவைக் களங்களுள் ஒன்று. இப் புலன் “காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் என்பது போல அறிவு வழியாகத் துய்க்கும் பேறு. அது, அதன் வண்ணமாக அமைந்து மாறிப்புகும் இன்பம். அறிதோறும் அறியாமை கண்டு மகிழும் புலனுகர்வே இவண் புலன் எனப்பட்ட தாம்.

புணர்வு உயிர்பகுத்தன்ன இருவர் ஒருவராகித் துய்க்கும் இன்பம். "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு?”

என ஐயவினா எழுப்பி அமைந்த விடை காட்டியது குறள் (1103).“உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள்” என்று உவந்து வினாவியதும் அது (குறள்.1106).

உவத்தல் என்னும் சொல்வழியாகப் பிறந்தவையே 'புணர்வு தொடர்பான மக்கள் வழக்குச் சொற்கள் என்பதை எண்ணிப் பார்ப்பின் உண்மை புலப்படும்.புணர்வு நட்புப் பொருளதேனும் இதன்பாற்படுத்தல் கூடாதாம். “ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள” என்பது வள்ளுவம்.

விளையாட்டும் இருபாற் பொது.கடலாட்டு,புனலாட்டு, சோலைக் காட்சி, மலைச் செலவு, சிலம்பாட்டம், கும்மி, கோல், குரவை, பந்து என்பன வெல்லாம் உவகைப் பொருளவே ஆம்.

அல்லல் தொடராது அமைந்த இன்பங்களே இவை என்பதை இந் நாள் விளையாட்டுக் குழுவினர் எண்ணிப் பார்க்க இதனை அவர்க்குப் படையல் ஆக்கலாம்.

சிற்பி கட்டும் கட்டுமானச் சீர்மை தொல்காப்பியர் கைப்பொ ருளாக இருத்தல் இவற்றாலும் மேல் வருவனவற்றாலும் புலப்படும். மேலும், இலக்கண வறட்சி என்பதற்கு இடம் தராமல்,

“உள்ளப் பட்ட நகைநான் கென்ப”

“விளிவில் கொள்கை அழுகை நான்கே