பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் - 19 குதிரைவாலி, காடை வாலி, காடைக்கண்ணி, வாளவரை

பொதுமக்கள் வழங்கியவையே.

வயெல்லாம்

அலைபோல, சூறாவளிபோல, காற்றாடி போல, பம்பரம் போல

– என்பன வெல்லாம் பெரிய இலக்கிய வாணர் படைப்பு இல்லை.

மக்கள் வாழ்வில் காணப்படும் உவமைகள் இவை.

உள்ளதை உள்ளவாறு மட்டும் சொல்லாமல், அதனை ஒத்த ஒன்று காட்டிப் பொருள் விளங்கவும் பொலிவு ஏற்படவும் செய்யும் உவமை மக்கள் பொது வளமாகப் புலமையர் கண்டு கொண்டு பாராட்டி ஒழுங்குபடுத்தியதேயாகும்.

கிளிப்பச்சையில் வண்ணம் உவமை.

குதிரை வாலியில் வடிவு உவமை. புலிப்பாய்ச்சலில் வினை உவமை.

மழைக் கொடையில் பயன் உவமை.

சோழன் யானை, பகை வேந்தர் குடையை எற்றி எற்றித் தள்ளியது. யானை எற்றுதல், கொற்றக் குடையின் வடிவம், நிறம் ஆயவை ஆ உதைக்கும் காளாம்பியைக் (காளானைக்) கண்முன் கொண்டு வந்தது. அதன் பொருளும் ஒப்பும் விளக்கமும் அவரை வயப்படுத்தின. அதனால்,

66

"ஓஓ உமன் உறழ் வின்றி ஒத்ததே

எனத் தொடங்கினார். உவமை எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒப்பாகி விட்டது என்பது அவர் வியப்பு.புலவர் பொய்கையார். நூல் களவழி நாற்பது. சிவந்ததும் கூர்மையானது மாகிய நாரையின் அலகைப் புலவர், "பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன

பவழக் கூர்வாய் செங்கால் நாராய்

என்றார். அதனைக் கேட்ட வேந்தன், பூரித்துப் போய்ப் புலவனை அழைத்துப் பரிசு வழங்கினான். உவமைப் பெருமை அல்லவா இது.புலவர் சத்திமுற்றப் புலவர்! கிழங்கைப் பிளந்து பார்த்தால் நாரையின் நாவும் தோற்றம் தருகிறதே. வண்ணமும் வடிவும் ஒத்த உவமை இது.

மழைபோலக் கொடையைக் கூறுவர். ஆனால், மழைப் பொழிவு போன்றது சொற்பொழிவு எனக் கண்டார் ஒருவர். 'பிரசங்கம்' என்றும், 'பெருஞ்சொல் விளக்கம்' என்றும் வழங்கி வந்தவரிடையே ‘சொற் பொழிவு' என ஒரு சொல்லைத்தந்தது மன்றிச், 'சொற்பொழிவாற்றுப் படை' என்னும் நூலும் தந்தார். அவர் நெல்லை பால்வண்ணர் என்பார். வினையும் பயனும் அமைந்த உவமை.