பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

வேறுவகை உவமை

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

"பாரியே ஒருநீதானா கொடையன்; மாரியும் உண்டே "

என்பது மறுப்பது போன்ற உவமை அல்லவா.

விரைந்து செல்லும் கதிரே, வரம்பிட்டுச் செல்கிறாய்; மறைகிறாய்; வருகிறாய்; விண்ணிலேயும் பகலில் மட்டும் விளங்குகிறாய்; நீ எப்படிச் சேரலாதனுக்கு ஒப்பாவாய் என்பதும் உவமையே (புறம். 8). அது ஓரீஇ (விலக்கி)க் கூறல் உவமை (1254).

கொடியோ இடையோ என ஐயுற்றுத் தடுமாறுவதாகக் கூறுவது தடுமாறு உவமம் (1256). தடுமாறல் என்பது இன்றும் வழக்குச் சொல் இல்லையா! 'தட்டுத் தடுமாறி' என்னும் இணைச் சொல்லும் வழக்கில் உண்டே. அற்றைக் கலைச் சொல், இற்றைவழக்குச் சொல்லாவது இது.

"மதியத் தன்ன வாள்முகம் போலும் தாமரைப் புதுப்பூ

என இரண்டு முதலிய உவமைகளை அடுக்குதல் ஆகாது.ஆதலால் ‘அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே”

66

என்றார். இனி,

“கலகவான் விழி வேலோ சேலோ

மதுரவாய் மொழி தேனோ பாலோ'

என்பது அடுக்கியது ஆகாது. ஐய உவமை யாகிவிடும்.

(திருப்புகழ்)

உவமை வழிப்பட்டவையே அணிகள் அனைத்தும் என்னும் துணிவால் ‘மயங்கா மரபின்' நூல் யாத்த தொல்காப்பியர், 'உவமை இயல்’ என்றே வகுத்தார். பின்னூல்கள் பிறபிற விரித்துப் பெருக்கி, பொருள் விளக்குதல் என்னும் வகையால் பொருள் தகுதி இழந்து போயின; போகின்றன.

அகம் புறம் ஆகிய பொருள்களுக்கு இடமாகியதும், மெய்ப்பாடு உவமை என்பவற்றின் உறைவிடமாகியதும், செய்யுள். ஆதலால், அதனைச் ‘செய்யுளியல்' என்று வகுத்தார் ஆசிரியர்.

செய்யுள் உறுப்பு

செய்யுள் உறுப்புகள் என முப்பத்து நான்கினை எண்ணி, அவற்றை முறையே, விரிக்கிறார்.

செய்யுள், பா, தூக்கு, பனுவல், தொடை, யாப்பு என்பன வெல்லாம் ஒருபொருள் குறித்த, பொருள் பொதிந்த சொற்கள். பொதுமக்கள் வழக்கில் பண்டு தொட்டு இன்று வரை வழங்கிவரப் பெறுவன.