பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

179

தொழிலொடு கலையுணர்வும் ஒன்றிச் செல்லுதல் காட்டும். 'கலை’ என்பது ஆடைக்கும், பா க்கும், பாடல் முதலிய கலைகளுக்கும் பொதுப் பெயராதல் அறிக.

அடி

ஒன்றன் அடியாக இருப்பது அடி. தேக்கடி, தேரடி, மரத்தடி

மட்டுமா?

இரயிலடி' எனத் தொடர்வண்டி நிலையம், பெயர் கொண்டதே. அடி ஒன்று கொண்டது, இயற்கை அல்லது நிலைத்திணை. ஆயிரம் அடி ஆல மரமும் ஓரடியின் வளர்ச்சியே.

-

அடி ஒன்றுடை

யது

யக்கமின்றி நின்றது. இயக்கமாக இரண்டு அடி வேண்டியதாயிற்று. ஆம்! ஊன்று நிலை, இயக்க நிலை யாக இரண்டு அடிகள் தேவைப்பட்டன. பறவைகள் ஈரடி பெற்றன. விலங்குகள் குறுக்கில் இயங்குவன. அதற்கு வாய்ப்பாக நான்கு அடிகள் கொண்டன. பூனை என்ன யானை என்ன; எலி என்ன புலி என்ன; நான்கு அடிகள் கொண்ட ன. மாந்தனும் ஒருகாலம் நான்கு அடி கள் கொண்டிருந்தே நிமிர்ந்தான். முன்னிரண்டு அடிகளும் கைகள் ஆயின. இக் காலம் வரை அந் நிலையைக் காட்டும் சான்றாகக் குழந்தை தவழ்ந்து பின் நிமிர்கிறது. முழுதுறு சான்றாக இருப்பது குரங்கு. நடக்கக் காலாக இருப்பவை, பற்றிப் பிடிக்கக் கையாகவும் இருத்தலைக் கண்டு எண்ணலாம்!

வாற் குரங்கு, வாலில்லாக் குரங்கு என்னும் வகையையும் நோக்கலாம். அடி இரண்டு - முழந்தாள் இரண்டு - தொடை இரண்டு; தொடை இரண்டும் தொடுத்தது இடை அல்லது இடுப்பு, இடுப்பின் மேலே, தொடை தொடையாக இணை இணையாக அமைந்த முள்ளந்தண்டு முதுகெலும்பு எத்தகைய அரிய இயற்கைக் கொடை!

ஈரடி

ஈரடிப் பெருமை என்ன?

-

தனித்தனியே நின்றால் -தொடுக்கப்படாமல் நின்றால், ஊன்று நிலை மட்டுமே இருக்கும்; இயக்கநிலை எய்தாது. இயக்கத்திற்குத் தொடை வேண்டும். ஆதலால், தொடை தொடையல் என்பவை தொடுத்தல், தொடர்ச்சி, தொடர்பு, தொடரி எனத் தொடர்ந்தன. இயங்கா மலையும் இடையீடு இன்றி இருந்தால், மலைத் தொடர் எனப்பட்டது.

ஈரடி எவ்வளவு நடக்கும்? கடக்கும்.

மண்ணையும் கடக்கும்; விண்ணையும் கடக்கும்.