பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

“கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோமின்றுணர்தல் தொல்காப் பியன்தன்

ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே பெருந்தொகை. 1368) தோம் இன்று = குற்றம் இன்றி. =

தடையா?

185

மொழிவளர்ச்சிக்கு இவ்வாணை தடை இல்லையா? மொழிக் காவல், மொழி வளர்ச்சித் தடையாகாது. வளர்ச்சிக்குரிய ஆக்கங் களை யெல்லாம் இயல்தோறும் அதிகாரம் தோறும் புறநடையாக ஆசிரியர் சொல்லிச் செல்வதையும், நூற்பாக்களில் சுட்டுதலையும் எண்ணிப்பார்ப்போர் இவ்வாறு கூற எண்ணியும் பாரார் என்க.

உரைப்பா

செய்யுள் ஒன்றே யாப்பு எனப் பின்னூல்கள் கொண்டிருக்கவும், தொல்காப்பிய முந்து நூலோ, எழுவகை யாப்புக்களைக் குறிக்கிறது.

பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பவை அவை. அவற்றைக் கூறும் நூற்பாவிலேயே,

"வண்புகழ் மூவர் தண்பொழில் உரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்"

என்றார் (1336).

பாட்டு யாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசியாப்பு, அங்கத யாப்பு, முதுசொல்யாப்பு என இவற்றை விரித்துக் கொண்டால் தெளிவாகும். பிசியாவது புதிர் (விடுகதை). அங்கதம் வசையும் இசையும் அமைந்த பா. முதுசொல் - பழமொழி. இவற்றின் விளக்கம்

மேலேகாண்போம்.

சொல்மரபு

சொல்லின் மரபு சொல்லும் ஆசிரியர், "மரபே தானும்,

நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று

என்கிறார் (1337).

நாற் சொல்லாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனச் சொல்லதிகாரத்துச் சொல்லப்பட்டவற்றை.

ஓசைவகை

அகவல் என்பது என்ன எனின், மயில் அகவுதல் போல்வது. அந்த யாப்பினை ஆசிரியர் கற்பித்தற்கும் நூல் இயற்றுதற்கும் பெரிதும் பயன்படுத்தியமையால் ‘ஆசிரியப்பா' எனவும் பட்டது. நூல் இயற்றப்