பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

201

மை,

பெண்மை: பேடை, பெடை,பெட்டை, பெண், மூடு, நாகு, கட அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பவை பெண்பாற் பெயர் என்கிறார்.

இளமைப் பெயர்களும், அவற்றைப் பெறுவனவும்

பார்ப்பு-பறவை, தவழ்பவை, குரங்கு.

பறழ் - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குட்டி-மூங்கா, வெருகு, எலி, அணில்,நாய்,பன்றி,புலி, முயல், குரங்கு. குருளை நாய், பன்றி, புலி, முயல், நரி.

கன்று

-

யானை, குதிரை, கழுதை, க

மை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை).

பிள்ளை - பறவை, தவழ்பவை, மூங்கா, வெருகு, எலி, அணில்,பன்றி, புலி, முயல், குரங்கு, ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை).

மக - குரங்கு, மக்கள்.

மறி - ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய்.

குழவி - குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மக்கள், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை).

போத்து -ஓரறிவு (நெல் புல் அல்லாதவை). இவ் விளமைப் பெயர் முதல் அடங்கலில் சுட்டப்படாதது: ஆண்பாற் பெயர்களுள் அமைந்தது. “குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை

கிழவ அல்ல மக்கட் கண்ணே

என மக்கள் இளமைப் பெயர் இரண்டே குறிக்கிறார். 'இரண்டு அல்லவை கிளவ (சொல்ல) அல்ல' என்றும் கூறுகிறார்.

ஆய்வு

பிள்ளை என்னும் பெயர் பெருவழக்காக இந் நாள் உள்ளது. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை, ஆண்பிள்ளைப்பிள்ளை (ஆம்பிளப் பிள்ளை), பெண்பிள்ளைப் பிள்ளை (பொம்பிளப் பிள்ளை) எனவும் வழங்குகின்றன. 'பிள்ளைத்தமிழ்' இலக்கியம் பெருவரவினது. 'பிள்ளை யாண்டான்' என்பதும் வழக்கு.

இவ்வாறு வழக்கு உள்ளமையால்,

"முடிய வந்த அவ்வழக்கு உண்மையின்

கடிய லாகா கடனறிந் தோர்க்கே

என்னும் ஆணை கொண்டு நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் (1568).