பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுவகை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

203

அறிவியல் எவ்வளவு எளிமையாய் இனிமையாய் உயிரோட்டம் பெறுகிறது என்பதை இந் நூற்பாக்களைக் கொண்டு தெளிக.

6

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே;

இரண்டறி வதுவே அதனொடு நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே;

ஆறறி வதுவே அவற்றொடு மனனே;

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

(1526)

இவ்வாறு அறிவு வகை கூறியவர், அவ் வறிவு உயிர்களை எடுத்துக்

காட்டுகிறார்.

“புல்லும் மரனும் ஓரறி வினவே;

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

நந்தும் முரளும் ஈரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

“சிதலும் எறும்பும் மூவறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நண்டும் தும்பியும் நான்கறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே" "மாவும் மாக்களும் ஐயறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

“மக்கள் தாமே ஆற்றி வுயிரே;

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"

(1527-1532)

எமக்கு முன்னரே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று முந்தை அறிவரைச் சுட்டினார் ஆசிரியர். புல்லும் மரனும் என்றால் பூண்டு, செடி, கொடி என்பன அக் கிளைப் பிறப்பு. அவ்வாறே பிறவும் கொள்க.

ஆய்வு

ஐந்து வகை, உயிரிகளையும் சுட்டும் நூற்பாக்களின் அமைதி கண்டு, ஆறாம் அறிவு உயிரியைச் சுட்டும் நூற்பாவை மீண்டும் காண்க.

"மக்கள் தாமே ஆறறி வுயிரே"

என்னும் இந் நூற்பா, இவ் வோரடியால் முடிந்து விடவில்லையா? ஐந்து நூற்பாக்களிலும் ‘பிறவும் உளவே' என்பதைப் படியெடுத்த கை, ஆறாவதும் அப்படியே எடுத்துவிட்டது என்பது புலப்படவில்லையா?