பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

ஒட்டுவேலை

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

இதன் மேலே தொடர்கிறது நூற்பா:

"நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய”

(1570)

மேலே அரசர்க்குரியவை. வைசிகற்குரியவை, வேளாண் மாந்தர்க் குரியவை இவை இவை எனக் கூறுகிறார். 'இழிந்தோர்’ என்று நாலா மவரைச் சுட்டுகிறார். இவற்றை முடித்து, ‘புறக்காழ்’ தொடங்குகிறார். இவ்வாறு தொல்காப்பியர் அமைத்திருத்தல் இயலாது என்பதை அவர்தம் ஓரியல் ஓதினாரும் அறிவர்.

இவ் வியலிலேயே ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு' என்று தொடங்கி இளமைப் பெயர், ஆண்பாற்பெயர். பெண்பாற் பெயர் இன்னவை எனக் கூறினார். இளமைப் பெயர் இவை இவை பெறுமென (1503-1524) உரைத்து, "சொல்லிய மரபின் இளமை தானே

சொல்லுங் காலை அவையலது இலவே”

என முடித்தார் (1525).

அதன்மேல் ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களை ஓதினார் (1526 - 1532). அந் நூற்பாவில், ‘மக்கள் தாமே ஆறறிவுயிரே’ என்று கூறி ஆண்பாற் பெயரை (1533 -1549) நிறைத்து,

66

‘ஆண்பால் எல்லாம் ஆண் எனற் குரிய;

பெண்பால் எல்லாம் பெண் எனற் குரிய;

காண்ப அவைஅவை அப்பா லான

என்றார் (1550).

அதன்மேல் பெண்பாற் பெயரைக் கூறத் தொடங்கி,

“பிடியென் பெண்பெயர் யானை மேற்றே”

எனக்கொண்டு

"பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே

என முடித்தார் (1569).

கூறிய இவை க

(1551)

மாற்றருஞ் சிறப்பின் மரபு’கள் என்பதில் தடையில்லை. ஆனால், நூலே கரகம், படையும் கொடியும், கண்ணி யும் தாரும், வாணிகம் வேளாண் என்பவை மாற்றருஞ் சிறப்பினவா?

மாறுவது மரபா?

தன்

இளமை, ஆண்மை, பெண்மை என்பவை தற்கிழமை ம பிறப்புரிமை கொண்டவை. பின்னே கூறியவையோ ‘எடுத்தால் உண்டு. - விடுத்தால் இல்லை. இவை பிறவியுரிமை எனின், இளமை போலவோ,