பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

“வழிஎனப் படுவது அதன்வழித் தாகும்”

“வழியின் நெறியே நால்வகைத் தாகும்

"தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே”

வ்வளவுடன் நூலை நிறைத்துப் புறனடை கூறல் முறைமை. ஆனால், சூத்திரம் காண்டிகை நூற்குற்றம் உத்தி என்பவை தொடர்கின்றன. வழிநூல் முதனூல் என்பவும் ஊடு புகுகின்றன. நூற் புறனடை என்னத்தக்க நூற்பா ஊடு கிடந்து பாடிழந்து நிற்கின்றது. அது,

"நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிபில் சொல்லொடு தழாஅல் வேண்டும்”

என்பதாகும் (1589). ஐம்பூதக் கலப்பே உலகம் என்பதை இந் நாள் அறிவியல் அறிஞர் மெய்ப்பிப்பதை அந்நாளே கூறிய அறிவர் தொல் காப்பியர் எனின் எத்தகைய நுண்ணியர் அவர்.

பின்னொட்டு

இனி, இம் மரபியல் ஒட்டுப்பகுதியெனக் கருதும் நூற்பாக்களில் வரும் சொற்கள் மூன்று, சுட்டத் தக்கவை. ஒன்று : உத்தி. இரண்டு : காண்டிகை. மூன்று : வைசியன்.

உத்தியும் காண்டிகையும் இவ் வொட்டில் அன்றித் தொல் காப்பியத்தில் இடம்பெறாதவை

வைசியனோ, மிகப்பிற்படு சொல். தொகை, பாட்டு, கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம் வரை இடம்பெறாதது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றமை இயல்பில்லை.

செய்யுளியலில் நூல், சூத்திரம், இயல் முதலியவை இடம் பெற் றுள்ளன. அங்கே இடம் பெற்றிருக்க வேண்டும் மரபியலில் வரும் நூல், உரை முதலியன.

ம்

தொல்காப்பியர் கூறும் சூத்திர இலக்கணம் :

"சூத்திரம் தானே,

ஆடி நிழலில் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே

என்பது (1425). இது செய்யுளியலில் உள்ளது. இனி, மரபியலில் வருவது,