பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இயலில் இடம் பெற்றுத் தனி நூலாகி உள்ளன. களவியல் கற்பியல்களிலும் புறத்திணையியலில் காணப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக் களை அன்னவை, எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. அவற்றை நோக்க அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் கூடிய பொருளின் முழுப்பரப்பும் தழுவிய நூலாக அந்நூல் இருந்திருத்தல் கூடுமென எண்ண இடமா கின்றது. தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்பவற்றிலிருந்தும் அரிய பாடல்களைப் பரிசிலென வழங்குகின்றார் இனியர்.

வரலாற்றுச் செய்தி

புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் காட்டும் வரலாற்றுச் செய்திகள் மிகப் பலவாம்.

“ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்” (புறத்.7).

அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்களை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் பொன்முடியார் ஆகியோர் பாடிய தகடூர் யாத்திரைப் பாடல்களைக் குறிக்கிறார் (புறத். 8).

பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி (நக்கண்ணையார்), ஒத்த அன்பினாற் காமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமுற்றுக் கூறியதை, காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் நூற்பாவில் (புறத். 28)

எடுத்துக்காட்டுகிறார்.

தமிழகத்துச் செய்தியாம் இவையன்றி அக்காலத்தில் தமிழில் வழங்கிய இராமாயண பாரதப் பழநூல்களில் இருந்து (அவை அகவற் பாவால் இயற்றப்பட்டவை) மேற்கோளும் செய்திக் குறிப்பும் காட்டுகிறார். கொள்ளார் தேஎங் குறித்த கொற்றத்திற்கு (புறத். 12) "இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது’ என்கிறார்.

“செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, ஒருவன் மண்டிய நல்லிசை நிலை” என்பதற்கு (17) “குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன என்கிறார்.

இவ்வாறு இராமாயண பாரதச் செய்திகளை எடுத்துக்காட்டுவ துடன் தொன்ம (புராண)ச் செய்திகளையும் சுட்டுகிறார்.

66

'இரணியனைப் போல வலியானும் வருத்தத்தானும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று” என்பது ஒன்று (புறத். 19).