பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

'பெண்' என்னும் சொல் ‘பெண்டு' என்றும் வழங்கும். பெண்டாட்டி’ என்றும் வழங்கும். இவ்வழக்கு சேனாவரையரால் பெரிதும் ஆளப்படு கின்றது (24, 25,161,163).

பொத்தகம் என்பது பழவடிவம். அதனைப் ‘புத்தகம்’ என்பது பின்வழக்கு. சாத்தன் புத்தகம், சாத்தனது புத்தகம் என வழங்குகிறார் சேனாவரையர் (413).

நாடகம் அல்லது கலை நிகழ்ச்சி நடத்தும் அரங்கு ‘ஆடரங்கு’ என வழங்குதலும், செயற்கை மலை உருவாக்கி வைத்தலும் (செய்குன்று) சுட்டுகிறார் (415).

நிலத்தை ஒற்றி வைக்கும் உறுதியோலை ‘ஒற்றிக்கலம்' எனவும், விலைக்கு விற்று எழுதிய எழுத்தை ‘விலைத்தீட்டு' எனவும் வழங்கும் வழக்கைக் குறிக்கிறார் (80). இவை அறிய கலைச் சொற்களாவன.

நூலின்

இடையும் கடையும் தலையும் மங்கலம் அமைய நூலியற்றும் வழக்கைக் குறிப்பிடுகிறார் (82).

கெட்டது என்பது காணாமற்போனது என்னும் பொருள் தருதலை “நம் மெருது ஐந்தனுள் கெட்ட எருது யாது?” என்பதால் அறிய வைக்கிறார் (32). வினை என்பது அறத்தெய்வம். சொல் என்பது நாமகளாகிய

தெய்வம்” என்று இவர் கூறுவது ஆழ்ந்த கருத்தினது (57).

6

உருபின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டம் என்னும் தொடக் கத்தன” என்பதால் ஒரு பொருட் பன்மொழிகளை அமைக்கிறார் (24).

இனியது என்பதைத் ‘தீவிது' என்பது நயமாக உள்ளது (78).

தொண்டு தொண்டன் என்பவை மதிப்புப் பொருளாக வழங்காமை அவர் காலத்திருந்தது என்பதை, “தாம் வந்தார் தொண்டனார் எனப் பன்மைக் கிளவி இழித்தற் கண்ணும் வந்ததால் எனின், ஆண்டு உயர் சொல்தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது” என்பதால் அறியச் செய்கிறார் (27).

“முன்தேற்று - புறத்தின்றித் தெய்வ முதலாயினவற்றின்முன்னின்று தெளித்தல்” (383).

“எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப்படாமையின் ஈண்டு அறியாப் பொருள் என்றது பொது வகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப்படாத பொருளையாம்” (31).

ன்னவை தெளிவுறுத்த வல்ல தேர்ச்சிச் சான்றுகள்.