பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

காலம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பேராசிரியர் இளம்பூரணர், இறையனார் களவியலுரைகாரர், யாப்பருங்கல விருத்தியார், தண்டியலங்காரர் ஆயோர்க்குப் பிற்பட்டவர் என்பதற்கு நூற்சான்றுகள் பலவுள்ளன (மெய்ப். 25; உவம. 37.). நச்சினார்க் கினியர் இவரைச் சுட்டிக்காட்டி வரைதலானும், பரிமேலழகர் பேராசிரியர் உரையை மறுத்து எழுதுதலானும் (திருக்.632) அவர்கட்கு இவர் காலத்தால் முந்தியவர் என்பது தெளிவாம். ஆகலின் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் பேராசிரியர் என்க.

சமயம்

பேராசிரியர் கொண்டிருந்த சமயம் இன்னதென வெளிப்பட அறிய வாய்ப்பில்லை; எனினும், இவர் சிவவழிபாட்டினர் என்பது அறிய வாய்க்கின்றது. அச் சிவ வழிபாடும் நெகிழ்வுடையதாய் அமைந்துள்ள நிலைமையும் புரிகின்றது.

,

'வாழ்த்தியல் வகையே" என்னும் செய்யுளியல் நூற்பாவில் (109) வாழ்த்தப்படும் பொருளாவன, கடவுளும் முனிவரும் பசுவும் பார்ப்பாரும் அரசரும் மழையும் நாடும் என்பன; அவற்றுட் கடவுளை வாழ்த்தும் செய்யுள் கடவுள் வாழ்த்தெனப்படும்" என்று கூறி நற்றிணையிலும் அகநானூற்றிலும் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களை எடுத்துக் காட்டுகிறார். இவற்றுள் முன்னது திருமாலைப் பற்றியது; பின்னது சிவனைப் பற்றியது.

அடுத்துவரும் "வழிபடு தெய்வம்" என்னும் புறநிலை வாழ்த்து நூற்பாவுரையில் காட்டிய "இமையா முக்கண்", "திங்கள் இளங்கதிர்" என்பன சிவனைப் பற்றியவை. இவ்விரண்டும் இவர் இயற்றியவை என்று அறியத்தக்க பாடல்கள். மேலும், கொச்சக ஒரு போகில் (செய்.149) இவர் காட்டும் எடுத்துக் காட்டுகள் பெரும்பாலும் இவர் பாடியனவே என்று அறியக் கிடக்கின்றன. அவற்றுள் பலவும் சிவபெருமான் பற்றியவை. திருமால், மூத்த பிள்ளையார், இளைய பிள்ளையார் பற்றியும் பாடி யுள்ளார். இதே நூற்பாவுரையில் இளம்பூரணர் கலித்தொகைப்பாக் களையே எடுத்தாண்டமைகிறார் என்பது ஒப்பிட்டுக் காணற்குரியது.

கடவுளை வாழ்த்துதல், முனிவரை வாழ்த்துதல், ஆவை வாழ்த்து தல், பார்ப்பாரை வாழ்த்துதல், அரசரை வாழ்த்துதல், மழையை வாழ்த் துதல், நாட்டை வாழ்த்துதல் என்பன பழந்தமிழர் வழிவழிக் கொண் டொழுகிய வழிபாட்டியல்பினவே என்பதைச் சங்கச் சான்றோர் நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் வழியே அறிந்து கொள்ளலாம். 'பார்ப்பார் வழிபாடும்' அத்தகைத்தோ எனின், "பார்ப்பான் என்பான்