பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

"பார்ப்பா ராயிற்,

குந்தி மிதித்துக் குறுநடை கொண்டு

வந்து தோன்றலும்,

அரசராயின்,

எடுத்த கழுத்தொடும் அடுத்தமார்பொடும்

நடந்து, சேறலும்,

இடைய ராயிற்,

கோற்கையும் கொடுமடி யுடையும்

விளித்த வீளையும் வெண்பல்லு மாகித் தோன்றலும்"

என்பதும்,

"அடக்கம் என்பது,

பணிந்த மொழியும் தணிந்த நடையும்

தானை மடக்கலும் வாய் புதைத்தலும் முதலாயின"

"வரைதல் என்பது,

காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும்

ஒழுக்கம்"

என்பதும் ஆகிய இவற்றைப் பார்த்த அளவான் எதுகை மோனைத் தொடை நலம் கெழும் நடைபயிலுதல் தெளிவாம்.