பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இணைச்சொல் அகராதி

85

கண்கூடு. அதனைக் கருதி வந்தது இவ்விணை மொழியாம். ‘அவன் ‘சுழிவு நெளிவு' அறிந்தவன்” எனச் சிலரைப் பாராட்டுவர். சூழ்ச்சி, சூழ்வு என்பவை அறிவு ஆராய்ச்சி வழிப்பட்டவை. அவையே சுழிவாம். சுழிவு வல்லார் சூழ்வார் எனப்படுவார். முன்பு நற்பொருளில் வந்த சூழ்ச்சி இப்பொழுது ‘தந்திரம்’ (ஏமாற்று) என்னும் பொருளில் வழங்குகின்றது. நெளிதல்- வளைதல். அதாவது வணங்கிய கையும் இணங்கிய நாவும் உடையவராக விளங்குதல்.

சுற்றம் சூழல்:

சுற்றம்

சூழல்

உடன் பிறந்தவர், கொண்டவர் கொடுத்தவர் என்பவர் சுற்றம் ஆவர்.

சுற்றத்தார்க்குச் சுற்றமாக அமைத்தவரும் அன்பும் நண்பும் உடையாரும் சூழல் ஆவர்.

சுற்றமும் சூழலும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் என் மங்கல விழாக்களுக்கு அழைப்பது வழக்கமாம்.

று

சுற்றம் அணுக்கமான அல்லது நெருக்கமான வட்டமும், சூழல் அடுத்த வட்டமுமாம். "உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேன்டா என்பதால் சுற்றம் உடன்பிறந்தாரைச்

சுட்டுதல் அறியவரும்.

சூடு சொரணை:

சூடு

சொரணை

தீயது அல்லது தகாதது; ஒருவர் செய்யும்போதோ சொல்லும்போதோ உண்டாகும் மனவெதுப்பு. மான உணர்வு.

சூடு சொரணை இல்லாதவன் என்றோ சூடு சொரணைக் கெட்டவன்’ என்றோ பழிக்கும் வழக்கு நடைமுறைப் பட்டது

இது

"எரிகிறது; எரிச்சலைக் கிளப்பாதே” என்பவை

என்பதை வெளிப்படுத்துவன.

சூடு

ஒன்று, தன் உடலில் படுவது தெரியாமல் இருப்பவரைச் 'சொரணை' இல்லாதவர் என்பவர். இங்குச் செய்யும் அல்லது சொல்லும் ஒன்று மனத்துத் தைக்காமல் இருத்தலைச் சொரணையில்லாமை எனப்பட்டதாம்.