பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2 ஓ

மருத நிலத்து வாழ்வு பற்றி எழுந்த நூல் பள்ளுநூல்; பின்னே பள்ளு ‘பாடல்' என்னும் பொருளில் வந்தது. ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்பது அது.

பற்று பாசம்

பற்று

பாசம்

நெருங்கி உறவாடி இருத்தல்.

- பிரிவின்றி இணைந்திருத்தல்.

“பற்று பாசம் இல்லாத மக்களென்னமக்கள்' என்று முதியோர் தம் மக்களைச் சலித்துக் கொள்வது தெரிந்த செய்தி.

பற்று - பற்றுதல் அல்லது இறுக்கிப் பிடித்தல் போல் அமைந்த நிலை. பாசம், ‘பசைபோல்' ஒட்டிக் கொண்டு இரண்டற நிற்கும் நிலை. பற்றும் பாசமும் அறுதல் துறவுச் சிறப்பை துலக்குவது எனினும்; இல்லற அன்புக்கும் உலகியல் நலத்துக்கும் பற்றும் பாசமும் விரும்பக் கூடியனவாகவே உள்ளன. ஆதலால் பற்றறுத்தலை வள்ளுவர் துறவிலே வைத்தார். (குறள் அதி 35) பாரதூரம்:

‘பார தூரம் தெரியாதவன்' என்பதொரு பழித் தொடர். நம் குடும்பத்தை இதுவரை தாங்கி உதவியவர் யார் என்பதைத் தெரிந்திருந்தால் அதற்கு ஏற்றபடி நன்றியோடு இருக்கத் தோன்றும். அது போல் நம் குடும்பத்திற்கும் இக் குடும்பத்திற்கும் உள்ள முன்பின் தொடர்புகளை அறிந்து கொண்டாலும் அதற்கு ஏற்றபடி உதவியாக வாழ்ந்து கொள்ளத் தோன்றும்? அவ்விரண்டும் அறியாதவனுக்கு என்ன தோன்றும் என்னும் வினாவில் ாவில் பிறந்தது இப் பழித் தொடாரம். பாரம் - தாங்குவார்; தூரம் - பழந் தொடர்பார்.

பாழும் பழியும்

பாழ்

பழி

வெறுமை

வசை

‘என்னபட்டு என்ன செய்வது? 'எஞ்சியது பாழும் பழியுமே' என ஏக்கமிக்கோர் தம் நிலைமை எண்ணித் துயர் ஊறுவர்.

முயன்று முயன்று தேடியும் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கடன்மேல் கடன் பட்டு கலங்குவாரும்,