பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை

அடுக்கடுக்காய் பூக்கும் மல்லிகை, அடுக்கு மல்லிகை. அடுக்கடுக்காய் அமைந்த பாறை, அடுக்குப் பாறை. அடுக்கடுக்காய் அடுக்கிய பானை, அடுக்குப் பானை. அடுக்கடுக்காய் அடுக்கியச்சட்டி, அடுக்குச்சட்டி. அடுக்கடுக்காய் அடுக்கும் மொழி, அடுக்கு மொழி.

இவற்றைப் போலவே' வந்த சொல்லே மீண்டும் வருவது, அடுக்குத் தொடர். (எ.டு) புலி புலி.

வந்த குறிப்புச் சொல்லே இரட்டை இரட்டையாய் அடுக்கி வருவது, இரட்டைக் கிளவி. (கிளவி-சொல்) (எ-டு) மளமள.

முன்னதைத் தனித்துப் பார்த்தாலும் பொருள் தரும் (எ-டு) புலி

பின்னதைத் தனித்துச் சொல்ல முடியாது; சொன்னால் பொருள் தராது (எ-டு) மள.

அடுக்கு மொழி, அடுக்குத் தொடர். இரட்டைக் கிளவி ஆகிய இம் மூவகையினும் வேறுபட்டது இணைச் சொல். (எ-டு) நிலம் புலம். (நிலம்-நன் செய்.புலம் புன்செய்).

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. (எ-டு) நிலம்.

இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்த தன்மையதாம்.

இணைச் சொற்கள் எப்படி இனணந்து நிற்கின்றன?