பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இலக்கிய வகை அகராதி

அட்ட மங்கலமே ஆதிக் கடவுளை

ஆசிரிய விருத்தம் எட்டந்தாதித் துரைத்தலே.”

என்னும் பிரபந்த தீபம் (3).

அண்டகோசம் (உலகப்படைப்பு)

173

நிலம், நீர், தீ, வளி, விண் என்னும் ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் உலகம் என்பது தொல்காப்பியம், அதனை விரித்துக் கூறுகின்றது பரிபாடல்,

உலகை, இறைமையாகக் காணும் மெய்ப் பொருளாளர்,

66

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.”

என்று பாடினார் (திருவாசகம் போற்றித் திருவகவல்).

இவ்வாறு, உலகம் தோன்றிய வகையை விரித்துக் கூறும் நூல் அண்டகோசம் என்பதாம். “அண்ட நிலை சாற்றல் அண்டகோசம். வகுப்புக் கலிவெண்பாவாம்' என்பது பிரபந்தத் திரட்டு (39).

உலகப் படைப்பு வரலாறு விவிலிய நூலில் உள்ளமையும் ஒப்பிட்டுக் காணத்தக்கது.

அந்தாதி (முடிமுதல்)

ஒரு செய்யுளின் இறுதிச்சீரோ, அதன் உறுப்போ அதனை அடுத்துவரும் செய்யுளுக்கு முதலாக வருமாறு பாடப்பெறும் நூல் அந்தாதி ஆகும்.

கலித்துறையால் செய்யப்பெறுவது ‘கலித்துறை அந்தாதி’

என்றும், வண்பாவால் செய்யப்பெறுவது அந்தாதி' என்றும் பெயர் பெறும்.

வண்பா

பத்துச் செய்யுள்களால் வருவது பதிற்றந்தாதி; நூறு செய்யுள்களால் வருவது நூற்றந்தாதி; பதிற்றுப்பத்தந்தாதி என்பதும் அது.