பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

'திருவிளையாடல் புராணம்' என்பது

துடன் ஒப்பிட்டு இணைத்து நோக்கத்தக்கது.

193

இலீலை

லீலை' என்ப

'கிரீடை' எனவரும் பனுவல்' 'இலீலை' வகையினதே. நாலாயிரப்பனுவில் ‘கண்ணன் பாலக்கீரிடை’ உள்ளது. இதழ்குவிபா

'இதழ் அகல்பா' தோன்றியபின், ஏன், 'இதழ்குவிபா' இருத்தல் கூடாது? என்னும் எண்ணத்தால் பிறந்தது 'இதழ் குவி பா' ஆகும்.

தழொட்டிப் பிறக்கும் எழுத்துகளாலேயே பாடல் அமைவது இஃதாகும். இப்பாவையில் வரும் எழுத்துகள் இதழ் ஒட்டிப் பிறப்பதால் இப்பாவினை 'ஒட்டகம்' எனப் பெயர் சூட்டலாம். இதழொட்டாப்பாட்டு (நிரொட்டகம்) என்னும் பெயரைக் கருதுக. 'ஒட்டகம்' என்பதன் பெயர்ப் பொருள்தான் என்ன? எத்துணை நாள்களோ ஒட்டிப் போய்ப் பட்டினி கிடக்கும் கரணியத்தாலேதான் ஒட்டகப் பெயர் வந்ததறிக. அகம் இடம்; இவண் வயிறு.

இவ்வகைப் பாடல்களை எழுதியவர் தண்ட பாணி அடிகளார் ஆவார்.

இதழகல் அந்தாதி

இதழொட்டா எழுத்துகளையே அமைத்து அந்தாதித் (முடிமுதல்) தொடைபடப் பாடப்படுவது இதழகல் அந்தாதி யாம்.

உ உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் உயிரெழுத்துகளும் இவற்றின் வரிசையும் ப், வ், ம் என்னும் ஒற்றும் இவற்றின் உயிர் மெய் யெழுத்துகளும் இதழொட்டிப் பிறப்பன. ஆகலின் இவற்றை விலக்கிப் பாடுவதே 'இதழகல்' பாவென்க.

திருவரங்க இதழகல் அந்தாதி, திருநெல்வேலி இதழகல் அந்தாதி என்பவை தண்டபாணி அடிகளால் பாடப் பட்டவை. முன்னதில் முப்பத்து இரண்டு (32) பாடல்களும், பின்னதில் முப்பத்து மூன்று (33) பாடல்களும் உள.

படும்.

இதழகல்பா ‘நிரொட்டகம்' என வடமொழியில் வழங்கப்