பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

ஏழோடு அமைந்த எழுகூற்றிருக்கை, அதன்மேல் எட்டாக உயர்ந்து நிற்பதே எண்கூற்றிருக்கையாம்.

எண்சீர் எண்பது

எண்சீர் அகவல் விருத்தம் எண்பது அமையப் பாடப்படுவ தொரு நூல் எண்சீர் எண்பதாம்.

தெய்வத் திருவாயிரத்தில் வரும் ‘எண்சீர் எண்பது’ எடுத்துக்காட்டாம். இந்நூல் தண்டபாணி அடிகள் அருளியது. எண்செய்யுள்

பாட்டுடைத் தலைவனது ஊரினையும், பெயரினையும் முதல் ஆயிரம் பா அளவும் பாடி, அவ்வெண்ணாற் பெயர் தருவது எண்செய்யுளாம்.

66

ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே சீரிதிற் பாடல் எண்செயு ளாகும்.'

(இலக்கண விளக்கம் பாட்டியல். 88)

“பாரியது பாட்டு, 'கபிலரது பாட்டு' எனச் செய்தோன் பெயர் பற்றி வருவனவும் கொள்க என்பார் இலக்கண விளக்கப் பாட்டியலார்.

66

பாட்டுடைத் தலைவன் ஊரும் பெயரும் பத்துமுதல் ஆயிரம் அளவும் பாடி

எண்ணாற் பெயர்பெறல் எண்செய்யுளாகும்.

எண்ணெழுத்து மாலை

وو

(முத்துவீரியம். 1080)

முதற்பாடல் எண்முறையிலும், அடுத்த பாடல் எழுத்து முறையிலும், அமைந்து தொடர்வதால் எண்ணெழுத்து மாலை என்னும் பெயர் பெற்றது.

இளம்பாவலர் வேங்கடராமனாரும், அருட்பாவலர் சேதுராமனாரும் முறையே எண்ணும் எழுத்தும் பாட இரட்டையர் யாத்த நூலாய் இலங்குவது “மதுரைப் பரிபூரண விநாயகர் யகர் எண்ணெழுத்துமாலை" என்பதாம். இந்நூல்