பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

207

கட்டளைக் ளக் கலித்துறைப் பாடல்கள் நூற்று எட் நூற்று எட்டனைக் கொண்டுள்ளது.

எண்கள் ஒன்று முதல் பத்துவரை ஏறி அதன்பின் இருபது முப்பது என நூறு வரைக்கும், இருநூறு முந்நூறு என ஆயிரம் வரைக்கும், ஈராயிரம், மூவாயிரம் எனப் பத்தாயிரம் வரைக்கும், இலக்கம், பத்திலக்கம், கோடி என ஏறி; இலக்கம், ஆயிரம், நூறு, பத்து வரைக்கும் ஒன்பது முதல் ஒன்றுவரைக்கும் இறங்கியும் ‘அனந்தாய்’ நிறைகின்றது.

எழுத்துகள் அகரமுதல் அஃகேணம் முடிய முறையாகத் தொடர்ந்து, பின்னர் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன என்னும் உயிர் மெய் வரிசையுள் நு, ண, ழ, ள, ற, ன என்பவை ஒன்றும், வ இரண்டும், எஞ்சியவை மூன்றும் ஆகிய எழுத்துகளை ஏற்றாங்குக் கொண்டுள்ளது.

இம்மாலையின் அருமைப்பாடு அருமைப்பாடு

L

பாராட்டத்தக்கது. எனினும், டடம், டவுள், வுள், டக்கை, க்கை, டமருகம், டவண்டை, டிண்டிமம், டாகினி, ராசினி, ரீங்காரம், லாகினி, லவணம், லாசகன், லுத்தன் என வரும் ஆட்சிகள் ஏற்கத்தக்கன அல்ல.

"ழகரந் தனக்கே உரித்தா வுடைத்தமிழ்.

66

"ளகர மெய் சேர்கள வாரண மாப்பிள்ளையாய்.

“றச்சேர் இடைஇலியும்பிலியும் அற்றவ."

“னவ்விரண் டாமெழுத் தாக்கொள் வசரக.

என்னும் ஆட்சிகள் அருமையிலும் அருமையாய்!

66

இலக்கிய வகையுள் இவ்வெண்ணெழுத்துமாலைக்கு முற்பட எழுந்தது வைணவி எண்ணெழுத்துமாலை”யாம். அதனை இயற்றியவர், இவ்விரட்டையருள் இளவலராம் அருட் கவியாரே.

எழுக்கூற்றிருக்கை

ஏழு அறையாகக் குறுமக்கள் (சிறுவர்) முன்னின்றும் புக்கும், போந்தும், விளையாடும் பெற்றியால் வழுவாமையால் ஒன்று முதலாக ஏழு இறுதியாக முறையானே பாடுவது எழு கூற்றிருக்கையாகும்.