பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2

ஆயிரத்தம்மன்

எருமைப் பலி

தொடர்ந்தமை, பாளையங்கோட்டை கோயில், 'பன்னீராட்டைக் கொருமுறை

யீட்டால்’ அறியலாம்.

கடிகை வெண்பா

‘நாழிகை வெண்பா' காண்க.

கடைநிலை

பரிசில் நீட்டித்தபோது அதனை வெறுத்த புலவன், வேந்தனது கடைக் காவலரிடம் முனிந்துரைப்பதாக வரும் நூல் கடைநிலை எனப்படும். இக் கடை நிலையை வசைப்பாட்டு என்றும், அங்கதம் என்றும் கூறுவர்.

66

66

கடைநிலை என்பது காணுங் காலைப் பரிசில் உழப்பும் குரிசிலை முனிந்தோர் கடையகத் தியம்பும் காட்சித் தென்ப.”

பரிசில் நீட்டித்தல் அஞ்சி வெறுத்தோர் கடைநின் றுரைப்பது கடைநிலை என்ப.’

(பன்னிருப் பாட்டியல். 355,356)

கடைநிலை எனினும் வசைப்பாட் டெனினும் அங்கதம் எனினும் ஒரு பொருள் மேற்றே.

(பன்னிருப் பாட்டியல் சங்கப்பிரதி. 161) இனிக் கடைநிலையைப் புறத்துறையில் வரும் ‘வாயினிலை' என்பாரும் உளர். அது, சான்றோர், ‘எம்வரவினைத் தலைவற்கு உரை' எனக் கடைக் காவலர்க்குக் கடைக்கண் நின்று கூறுதல் என்பர் (அகராதிகள்).

66

புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை கரவின் றுரையெனக் காவலர்க் குரைத்தன்று.”

- (பு. வெ. 190)

என்னும் புறத்துறை, கொண்டு கூறப்பெற்றது இதுவாகும். ‘கடைநிலை' - வினாவிநிற்றல் எனப்பொருள் காணலும்

உண்டு.