பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

கழிநெடில்

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

ஐஞ்சீரடி, நெடிலடி; அதன்மேற் சீர்களையுடைய அடி கழிநெடிலடி; கழிநெடிலடியால் அமைந்த நூல் ‘கழிநெடில்’ எனப் பெயர் பெற்றது.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பத்துப் பாடல்களையுடையதொரு சிற்றிலக்கியம் ‘குறுங்கழி நெடில்' எனப்படுகிறது.

14 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பப்பத்துப் பாடல்களையுடைய இரண்டு சிற்றிலக்கியங்கள் பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

எனவும், நெடுங்கழிநெடில் எனவும் வழங்கப்படுகின்றன.

இம்மூன்றும் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளாரால் அருளப்பட்டவை.

கழிநெடில்' வகையிலே உச்சியை எட்டும் ஒருபாடல் வள்ளலார் அருளியது. அது 224 சீர்க்கழிநெடிலடி ஆ சிரிய விருத்தத்தான் அமைந்தது. அத்துணைச் சீர்களையுடைய ய அடிகளை எதற்காக யாத்தார் அடிகள்? 'இறைவன் திருவடிப் பெருமைக்கோர் அளவும் உண்டோ?' என்பதைக் காட்டுமாப் போலத் ‘திருவடிப்புகழ்ச்சி’க்கென யாத்தார். பொருளால் மட்டுமன்றி, அடிகளாலும் அடிச்சிறப்பை விளக்க அடிகள் காண் குறிப்பு இஃதாம்; முதல் திருமுறை முதல் பாட்டு என்பதன் பொருள் என்ன? முதன்மையும், முதன்மையில் முதன்மையும் சுட்டுவது மட்டுமோ? கடவுள் வாழ்த்துப் பத்துக் குறள்களில், ஏழு குறள்களில் தாளும் அடியும் தலைவைத்து வழிபட்ட வள்ளுவர் உள்ளுறை விளக்கக் குறிப்பும் ஆகலாமே! களவழி

போர்க்களச் செய்தியைக் கூறும் நூல் களவழியாம். களவழி நாற்பது என்றொரு நூல் கீழ்க்கணக்கில் உள்ளது. போர்க்கள நிகழ்ச்சியையே புனைந்துரைக்கும் அந்நூல் பொய்கையாரால் பாடப்பட்டதாம். அது வெண்பா யாப்பினது.

போர்க்களம், செருக்களம், மறக்களம், அமர்க்களம், களம் எனவும் பெயர்பெறும். மறக்களவஞ்சி, செருக் களவஞ்சி காண்க.