பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

241

ஒவ்வோர் அடியின் நான்காஞ்சீரையும் தனிச் சொல்லாக அமைத்துப் பாடுவதும் கும்மியில் உண்டு. கொங்கண நாயனார் அருளிய வாலைக்கும்மி, மதுரை வாலைசாமி அருளிய ஞானக்கும்மி முதலியவற்றைக் காண்க. கும்மியைக் 'கொம்மி' என்பார் வள்ளலார். 'நடேசர் கொம்மி' காண்க.

கும்மிகள் சந்தம் பலப்பல கொண்டு இயலும் என்பது சாக்கோட்டை உமையாண்டவள் சந்தக் கும்மியால் விளங்கும். கல்லைக் கனிவிக்கும் சித்தனடி - முடி

66

கங்கைக் கருளிய கர்த்தனடி

தில்லைச் சிதம்பர சித்தனடி - தேவ சிங்க மடியுயர் தங்கமடி.

என்பது நடேசர் கொம்மியில் ஒரு பாட்டு.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே” எனவரும் பாரதியார்

பாடல் கும்மிப்பாட்டேயாம்.

குலோதயமாலை (குடிவரவு)

பாட்டுடைத் தலைவன் பிறந்த குடிவரவினை நயமுற விரித்துக் கூறுதல் குலோதயமாலையாம்.

கலிங்கத்துப்பரணி கூறும் 'இராசபாரம்பரியம்' குலோதயச் செய்தியாம். கல்வெட்டுகளில் வரும் மெய்க் கீர்த்திகளும், குடிவரவுரைப்பதுடன், அவர்கள் செய்த செயல்களையும் தலைவன் செய்தவையாகச் சிறப்பித்துக் கூறுவதுண்டு.

“வளிதொழிலாண்ட உரவோன் மருக.'

என்பனபோலப் புறப்பாடல்களில் வருவன குலோதய மாலைக்கு முன்னணியவாம்.

“மானக் குலோதய மாலைகுலந் தான் விரித்தல்.”

என்பது பிரபந்தத்திரட்டு (8).

குவிபா ஒருபது

இதழ் குவிதலால் பிறக்கும் எழுத்துகளே வரப் பாடப் பெறும் பத்துப்பாடல்களைக் கொண்ட ஒரு சிறுநூல் குவிபா ஒருபதாகும்.