பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

சங்கச்சான்றோர் பாடிய கலித்தொகையில் இடம் பெற்ற கைக்கிளைப் பாடல்கள் ஆண்பாற்பட்டனவே என்றறிதல் தெளிவிக்கும்.

கைக்கிளை மாலை

ஒருதலைக் காதலால் வருந்துவது பற்றி அந்தாதியாகப் பாடப்பெறுவது கைக்கிளை மாலை எனப்பெறும்.

வருத்தச் செய்வன இவை என்பதையும், வருத்தும் மன் மதன் அம்புகள் இவை என்பதையும் பன்னிரு பாட்டியல் விரித்துக்கூறும்.

"இரங்க வருவது மயங்கிய ஒருதலை இயைந்த நெறியது கைக்கிளை மாலை. தாயர் சேரியர் ஆயர் தீங்குழல்

தென்றல் சேமணி அன்றில் திங்கள் வேலை வீணை மாலை கங்குல் காமன் ஐங்கணை கண்வளர் கனவென எஞ்சிய நன்னிற வேனில் குயிலே கொஞ்சிய கிள்ளை கொய்தளிர்ச் சேக்கை பயில்தரு நன்னலம் பாங்கர் பாங்கியர்

இயன்ற பருவரல் என்மனார் புலவர்.

66

'முல்லை அசோகு மாந்தளிர் தாமரை யல்லி நீலம் ஐங்கணை யாகும்.

(பன்னிருப் பாட்டியல் 295-97)

தாமரையல்லி - தாமரையாகிய அல்லி என்க.

கைக்கிளைக்கும், கைக்கிளை மாலைக்கும் பொருளொப் புடையதேனும் முடிமுதல் தொடையாகப் பாடுதல் மாலைக் குரியதென வேறுபாடற்க. இனிப் பாடல் எண்ணிக்கை பகராமை யும் கருதுக.

இனிக் கைக்கிளை மாலை மருட்பாவாற் பாடப்படும். அல்லாதவழி ஆசிரியம் வஞ்சி ஒழிந்த பாக்களாலும் இனங்க ளாலும் பாடப்பெறும். சிறுபான்மை ஆசிரியப் பாவானும் பாடப்படும் என்றும் கூறுவர் (பன்னிரு 295-97 உரை).