பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

257

கோவை பாடுக” என்னும் திருமொழியோ, சுவை நலப்பேற்றினைச் சொட்டச் சொட்ட உரைக்கும்.

66

கோவை என்பது கூறுங் காலை

66

66

மேவிய களவு கற்பெனுங் கிளவி

ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ முந்திய கலித்துறை நானூறென்ப.'

களவினுங் கற்பினும் கிளவி வகையாற் றிணைநிலை திரியாச் செம்மைத் தாகி நாட்டிய கலித்துறை நானூ றுரைப்பது கோட்ட மில்லாக் கோவை யாகும்.

(பன்னிருப் பாட்டியல். 341-342)

முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து

களவு கற்பெனும் வரைவுடைத் தாகி

ஆறிரண் டுறுப்பும் ஊறின்றி விளங்கக்

நலனுற கலித்துறை நானூ றாக

கூறுவ தகப்பொருட் கோவை யாகும்.

-(இலக்கண விளக்கம் பாட்டியல். 56)

கோவை வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றாலும் வழங்கப்படும் என்பார்.

66

முதல்கரு உரிப்பொருளொரு மூன்றும்

அடைந்து கைக்கிளை அன்புடைக் காமப் பகுதிய வாங்கள ஒழுக்கமும் கற்பும் இயம்புத லேயெலை யாகக் கட்டளைக் கலித்துறை நானூற் றாற்றிணை முதலாகத் துறையீ றாகச் சொல்லப்பட்டும்

ஈறா றகப்பாட் டுறுப்பும் இயையக் கூறுவ தகப்பொருட் கோவையா மற்றிஃ தகவல்வெண் பாக்கலி யடுக்கியல் வண்ண

வஞ்சி யினானும் வழுத்தப் படுமே.”

(முத்துவீரியம். 1042)