பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும்,

இலக்கிய வகை அகராதி

“வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம் கொள்வது நான்மணி கோத்தவந் தாதி.”

301

(பன்னிருப் பாட்டியல். 257,259)

“வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல் பின்பேசும் அந்தா தியினாற் பதுபெறின்

நான்மணி மாலை யாமென நவில்வர்.

(இலக்கண விளக்கம் பாட்டியல். 61)

அகவலும், அகவல் விருத்தமும் நாற்பதாக, அகவலை முற் கொண்டு கூறுவதும் நான்மணிமாலை என்பர். ஆனால் அவர் அகவல் விகற்பமும், அகவல் விகற்பவிருத்தமும், நான்கு கூறுபடக் கொண்டு வகுப்பார்போலும். ஆயினும் தகவுடையதன்று.

"அகவலும் அகவல் விருத்தமும் நாற்ப தகவலை முன்வைத் தறைவது கடனே.’

நானாற்பது

(பன்னிருப்பாட்டியல். 258)

நான்கு வகைப்பொருள்களைப்பற்றி நாற்பது நாற்பதாகப் பாடப் பட்ட நூல்வகை நானாற்பது எனப்படும்.

இவ்வகையில் பதினென்கீழ்க்கணக்குத் தொகுதியுள் இடம் பெற்றுள்ள கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் தொகுதி எடுத்துக்காட்டாம். ஆயின், ஒருவரால் செய்யப்பட்ட நூல்கள் அவையல்ல. தனித் தனி ஒருவரால் செய்யப்பட்டது என்பது வேறுபாடு.

கீழ்க்கணக்கு இவையெனச் சுட்டும் பாடலில் 'நானாற் பது’ து' என என வருவது கொண்டு இவ்வகை தோன்றியதெனல் வெளிப்படை. ‘நாற்பது' என்னும் வகையே சாலும்.

நானிலைச் சதகம் (நானிலை நூறு)

சரியை, கிரியை, யோகம், ஞானம், (ஒழுக்கம், வழிபாடு, ஓகம், அறிவு) எனப்படும் நான்கு படிகளையும் பற்றி நூறு பாடல்கள் பாடுவது நானிலைச் சதகம்.