பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

303

நிரொட்டக க யமக அந்தாதி, திருத்தில்லை நிரொட்டக யமக அந்தாதி என்பவை போல்வன எடுத்துக்காட்டாம்

நூல்

எ-டு:

“யானைக்கண் டங்கரி சென்றேத் தொழிற்செந்தி லின்றடைந்தே யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை யேய்ந்ததகை யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே.'

(திருசெந்தில் நிரோட்டக யமக அந்தாதி -1)

நூல் என்பது இலக்கண நூலைக் குறிப்பதாக எழுந்தது. மரத்தின் வளைவை நீக்குதற்கு நூல் அடித்து அறுத்து ஒழுங்கு படுத்துவதுபோல, அறிவின் திரிவை அகற்றி ஒழுங்குப்படுத்து வது நூல் என்னும் கரணியப் பெயராயிற்று.

நூல் இயற்றுதற்குரிய பாவகையாக இருந்தமையால் ருவகை அகவல் ‘நூற்பா' என வழக்கூன்றியது. நூல் என்பது இலக்கணப் பொருளதாதல் நன்னூல், சின்னூல், தொன்னூல் என்பவற்றால் விளங்கும். இவை முறையே பவணந்தி முனிவர், குணவீரபண்டிதர், வீரமாமுனிவர் ஆகியோரால் இயற்றப் பட்டவை. நூல் என்றொரு நூல் இருந்தமை சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையால் விளங்கும்.

நூற்றந்தாதி

நூறு

வெண்பாவினாலேனும்,

நூறு

கலித்துறையி

னாலேனும் அந்தாதித்துக் கூறுவது நூற்றந்தாதியாகும்.

“வெண்பா நூற்றினா லேனும் கலித்துறை நூற்றினாலேனும் அந்தாதித் துரைப்பது

நூற்றந் தாதியாம் நுவலுங் காலே.'

(அந்தாதி காண்க).

(முத்துவீரியம், 1084)