பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

நெஞ்சறிவுறூஉ

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

அறிவுறூஉ - அறிவுறுத்துதல். பாடும் புலவர் தம் நெஞ் சுக்கு அறிவுறுத்திக் கூறுமாறுபோலக் கூறி, உலகோர் பய னெய்த அருளும் நூல்வகை நெஞ்சறிவுறூஉ ஆகும்.

வள்ளலார் அருளிய நெஞ்சறிவுறுத்தல் 1406 அடிகளால் ஆகிய கலிவெண்பாவால் இயல்கின்றது.

66

பொன்னார் மலைபோற் பொலிவுற் றசையாமல் எந்நாளும் வாழியநீ என்நெஞ்சே.

எனத் தொடங்கி.

66

பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும் வாழ்வாயென் னோடு மகிழ்ந்து.

என நிறைகின்றது.

99

நெஞ்சுக்கு அறிவுறுத்தல் உரையாக,

66

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனிற் றீய தென்றே தெண்ணிலையே -மல்லல்பெறத் தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க என்றதனைப் பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி அகழ்வாரைத் தாங்கு நிலம்போல வென்னும் திகழ்வாய் மையநீ தெளியாய்.”

(433-35)

என்று குறள் மணிகளையும், பிறர் பிறர் கூறும் மணிகளையும் படைபடையாக எடுத்துரைத்து நடையிட்டுச் செல்கிறது நெஞ் சறிவுறுத்தல். செவியறிவுறூஉ காண்க.

நெடுந்தொகை

“நெடிலடிச் செய்யுள் நெடுந்தொகை யாமே."

என்பது பிரபந்ததீபம் (52)

அடியின் எண்ணிக்கை கருதி நெடுமை, குறுமைகாணல் தொல்வழக்கு.

ஆசிரியர் தொல்காப்பியர் 'நெடுவெண்பாட்டு', ‘குறு வெண் பாட்டு, என்று கூறியமை அடி எண்ணிக்கை கருதியே.