பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இலக்கிய வகை அகராதி கனாநிலை நிமித்தம் பசியே ஓகை பெருந்தேவி பீடம் அழகுற இருக்க அமர்நிலை நிமித்தம் அவள்பதம் பழிச்சா மன்னவன் வாகை மலையும் அளவும் மரபினி துரைத்தல் மறக்களங் காண்டல் செருமிகு களத்திடை அடுகூழ் வார்த்தல் பரவுதல் இன்ன வருவன பிறவும் தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே.”

317

- (பன்னிருப் பாட்டியல். 243)

கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல் கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம் கடிகணம் உரைத்தல் காளிக் கிதுசொலல் அடுபேய்க் கவள்சொலல் அதனால் தலைவன் வண்புகழ் உரைத்தல் எண்புறத் திணையுற வீட்டல் அடுகளம் வேட்டல் இவைமேல் அளவடி முதலா அடியிரண் டாக

உளமகிழ் பரணி உரைக்கப் படுமே.”

(இலக்கண விளக்கம் பாட்டியல். 79)

பரணிப்போர் முறையைப் பன்னிருபாட்டியல்,

66

மயக்கறு கொச்சகத் தீரடி இயன்று

நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து வஞ்சி மலைந்த உழிஞை முற்றித் தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை வெம்புசின மாற்றான் தானைவெங் களத்திற் குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்

தொருதனி ஏத்தும் பரணியது பண்பே.'

(பன்னிருப் பாட்டியல். 242)

எனக்கூறும். நவநீதப் பாட்டியலோ பரணியின், இலக்கணத்தை ஐந்து கட்டளைக்கலித்துறைகளால் விரியக் கூறும் (57-61)

பரணி என்பது நாண்மீனின் பெயர். பரணி நாள் முதன் முதல் அடுப்பில் தீமுட்டி அடுதற்கு உற்றநாள் என்பர். அந்