பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

இலக்கிய வகை அகராதி

சூளவணை மீட்பவனைப் பணிவித் துழவருழக்

காளை வெருட்பாளை பாயப்புலம்பல் எழுந்து வித்தல் ஆளத் தலைவற் குணர்த்தல் நடல்விளை செப்பம் செய்நெல் நீள அளத்தல் முதற்பள்ளி கூவேசல் மூட்டவையே.'

99

இவ்வமயங்களிற் பாட்டுடைத் தலைவன் பெருமை யாங்காங் கொவ்விய சிந்து விருத்தம் விரவிவரத் தொடர்பு

செவ்விதிற் பாடுமது உழத்திப்பாட்டு பள்ளுமென்பர் நவ்வி எனக்கண் மடவீர் பிறர்தம் நாட்டுவரே.”

325

இப்பாடல்களின் அமைப்பும் ஓட்டமும், பள்ளுநூல்களின் செய்திகளை வாங்கிக்கொண்டு ‘முதலுழவு செய்வான் முறை யெனத் தெளிவாக்குதல் வெளிப்படையாம்.

திருவாரூர்ப்பள்ளே' முதற்பள்ளு என்பர். முக்கூடற் பள்ளின் சுவை நாடறிந்தது. பள்ளு நூலின் இசைவளம் ‘ஆடு வோமே பள்ளுப் பாடுவோமே' என வரும் நாட்டியற் புலவர் பாரதியார் பாட்டால், ‘பள்ளு' என்பதற்குப் ‘பாட்டு' என்னும் பொருள் உண்டாதல் அறிந்த செய்தி. இது பள்ளின் சிறப் பெனல் வெளிப்படை.

பவனிக்காதல்

து

உலாக்காட்சியினால் உண்டாகிய காமம் மிகுந்தால் அதனைப்பிறரொடும் உரைத்து வருந்துவது பவனிக்காதல்

என்னும் பெயர்பெறும்.

66

காமரு முலாவற் காட்சி யாலே

அடைந்த காம மிக்கா லவற்றைப்

பிறரொடும் எடுத்துப் பேசி வருந்துதல் பவனிக் காதலாம் பகருங் காலே.

பறந்தலைச்சிறப்பு

99

(முத்துவீரியம். 1121)

பேய்கள் போர்க்களத்தில் ஆக்கின கூழை உண்டு களித்துக் கைகோத்துக் குரவைகூத்து ஆடுவது பறந்தலைச் சிறப்பு எனப் பெறும். அதனைப் பாடுவது பறந்தலைச் சிறப்புப்பாட்டு ஆகும். பறந்தலை = போர்க்களம்.

- (நவநீதப் பாட்டியல். 61 (உரை))