பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

பறைநிலை

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

2 ஓ

அரசர் இனியவையெல்லாம் எய்துமாறு தெய்வம் காக்க வண்டித் திருவிழாவின் பொழுதிலும், முடிசூட்டு விழா வின்பொழுதிலும் வேண்டிக்கொண்டு; நாடும், நகரமும், நலம்பல எய்துமாறு வாழ்த்துரைத்து வஞ்சிச்சீர் பயிலப் பாடுவது பறைநிலை என்னும் பெயர்பெறும்.

“காவலர் இனிதுறத் தேவர்காத் தளிக்கெனக் கடவுளர் விழவினும் கதிர்முடி விழவினும் நாடும் நகரமும் நலம்பெற இயம்பி வருநெறி வஞ்சி வழங்கப் பற்றிய

மொழிவரத் தொடுப்பது பறைநிலையாகும்."

(பன்னிருப்பாட்டியல்.329)

பன்மணிமாலை

கலம்பக உறுப்புகளுள் அம்மானை, ஊசல், ஒருபோகு கியவை ஒழிந்து ஏனைய வெல்லாம் வரப்பாடுவது பன் மணிமாலையாகும்.

66

66

கலம்பகத்தின், ஆட்டிய அம்மனை ஊசல் ஒருபோகும் அற்று வந்தால் பாட்டியல் பன்மணிமாலை

“அவற்றுள்,

“ஒருபோ கம்மானை ஊசல் இன்றி வருவது பன்மணி மாலை யாகும்."

-

- (நவநீதப் பாட்டியல். 39)

(இலக்கண விளக்கம் பாட்டியல். 54)

முற்கூ றியகலம் பகத்துள் வருமொரு

போகும் அம்மனை ஊசலும் போக்கி ஏனைய உறுப்புகள் எல்லாம் அமையப் பாடுவ ததுதான் பன்மணி மாலை.'

பன்னிருபாமாலை

(முத்துவீரியம். 1055).

பன்னிருவகை யாப்பால் அமைந்த பன்னிரு பாடல் களையுடையது இம்மாலை. தண்டபாணி அடிகள் அருளிய