பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வகை அகராதி

343

ல்

கட்டுக்கதை என்றும், புனைகதை என்றும், சொல்லப்படும் சிறுகதை, தொடர்கதை என்பவையும், நாடகம் திரைப்படம் ஆகியவையும் உள்ளது உள்ளவாறு கூறுவன அல்ல. 'இல் லோன் தலைவனாக இல்லது கூறலும்' கூத்து வகைக்குரிய தெனக் கொள்கை வகுத்துளர், இப் பொய்ப்புனைவால் மெய்ந் நலம் உண்டு என்னும் கருத்தாலேயாம்.

நல்ல பொழுதுபோக்காவதுடன், புனைவில்வரும் நன் னிகழ்வு நறுவிதாய் நெஞ்சகம் புகுந்து நிலைபெற்றுத் தன் வயமாக்கித் தீயோனையும் திருத்தும் நலப்பாடு உடையதாம். ‘கட்டி பூசிக் கடுத்தீற்றுவதுபோல' சுவையாகத் தோன்றிச் சுட்டும்நலம் சேர்ப்பது கண்கூடாகலின் இத்தகையவும் நூற் பொருளாக நுவலப்பட்டதென்க.

66

66

பொய்ம்மொழியும் மெய்ம்மொழியும் போற்றுமலங் காரமிரண் டய்யகலி வெண்பாவால் ஆற்றுவன.

(பிரபந்தத் திரட்டு 16)

என்பதால் இது கலிவெண்பாட்டால் வருமென அறியலாம். பொய்மையும் வாய்மையிடத்தபுரை தீர்ந்த, நன்மை பயக்கு மெனின்.

99

என்னும் குறள் (292) கருதத்தக்கது.

"மெய்ம்மொழி அலங்காரம்' பார்க்க.

பொருள்வஞ்சி

புறத்திணைக்கண் ஒருதுறைப் பொருளை விரித்துக் கூறின் அஃது அப்பொருள் வஞ்சியாகும்.

"விரித்தொரு பொருளை விளம்பினப் பெயராம்.

போதம் (மெய்யறிவு)

(இலக்கண விளக்கம் பாட்டியல். 109)

மெய்ப்பொருள்பற்றி விளக்கிக் கூறும் நூல்வகை 'போதம்' எனப்படுகின்றது. அத்தகு நூல்களுள் 'சிவஞான போதம்' தலைப்பட்டது. அதனைக் கண்டவர் பெயரே ‘மெய் கண்டார்' எனின் வேறுவிளக்கம் வேண்டுவதின்று. பன்னிரு