பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

“நில்லா உலகம் புல்லிய நெறித்தே.

என்னும்.

99

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே.

என்னும் புறநானூறு.

66

'ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்."

என்னும் திருக்குறள். (233)

நாலடியார் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்பவற்றை விரிக்கும்.

நிலையாமை பொதுவில் அறியப்படுமாயினும், போர்க் களத்து அறியப்படுதல் மிகத்தெளிவாம். ஆகலின் களப்போர் சுட்டும் வஞ்சிக்கு எதிரிடையாம் காஞ்சி, நிலையாமைப் பொருளும் தரலாயிற்று. நிலையாமை கருதி, அறமேற்கொண்டு ஒழுக அறிவுறுத்தும் நூல்களுள் ஒன்று முதுமொழிக்காஞ்சி என்பதும் அறிக. அசோக மன்னன் வெற்றியிலே ‘புத்தசமயப் பரப்பல்' எழுந்ததும் உணர்க.

மும்மண்டிலப்பா

ஒரே ஒரு பாடலாக இருந்து, அதனைப் பகுத்துப் பார்க்க மூன்று பாடல்களாய், மூவகையாப்பியல்புடைய தாய், பொரு ளமைதி நிறைவுடையதாகத் திகழும். இவ்வகைப்பா மும் மண்டிலப்பா எனப்படும். மும்மண்டிலப்பா திருவரங்கத்திரு வாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

‘பகுபடு பஞ்சகம்' ‘பிறிதுபடுபாட்டு' பார்க்க. மும்மணிக்கோவை

ஆசிரியம், வெண்பா, கலித்துறை ஆகிய மூன்றும் முறையே முப்பது பாட்டான் வருவது மும்மணிக்கோவையாகும். கோவை யாவது கோக்கப்பட்ட மாலைபோல்வது.