பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

மனவாசகங்கடந்தார் இயற்றியது ‘உண்மை விளக்கம்’: உமாபதியார் இயற்றியது 'உண்மைநெறி விளக்கம்.' வை மெய்ப்பொருள் விளக்கவழி வந்தவை.

குமரகுருபரர் அருளிய ‘நீதிநெறி விளக்கம்’ அறநெறி

விளக்கமாம்.

மேழிவிளக்கம் என்பதொருநூல் வேளாளர் வரலாற்று

விளக்கமாக அமைந்துள்ளது.

சித்தர்பாடல் தொகுதியில் ‘நெஞ்சறி விளக்கம்' உண்டு.

விளக்குநிலை

வேலும் வேல்தலையும் விலங்காது ஓங்கியவாறு போலக் கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு ஓங்குமாறு கூறுவது விளக்கு நிலையாகும்.

66

இதனைத்,

66

வேலும்வேற் றலையும் விலங்கா தோங்கிய வாறுபோற் கோலொடு விளக்கு மொன்றுபட்

டோங்குமா றோங்குவ தாக உரைப்பது

விளக்கு நிலையென விளம்பப் படுமே."

துளக்கமில் மன்னர்க் காம்விளக் குரைப்பது விளக்கு நிலையென வேண்டினர் புலவர்.

என்றார் பன்னிரு பாட்டியலார் (325).

- (முத்துவீரியம். 1097)

வேந்தன் விளக்கைப் பற்றிக் கூறுவதும், அவனைக் கதிருடன் ஒப்பிட்டுக் கூறுவதும் விளக்குநிலை என்னும் துறை யாகப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும்.

வினாவிடை

(200, 201).

வினாவிடை என்பது வினாவும் விடையுமாக அமைந்த பாடல்களால் ஆகிய நூல்வகையைக் குறிப்பதாயிற்று.

தாமே வினாவை எழுப்பிக்கொண்டு விடையிறுப்பதாக வும், பிறர் கேட்ட வினாவுக்கு விடையிறுப்பதாகவும் 'வினா விடை’ அமைதலுண்டு.