பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ

இணைச்சொல் அகராதி

23

'காலம்' என்றாலே கார்காலம் அல்லது மழைக் காலத்தையே குறிக்கும். காலச் சோளம், காலப்பருத்தி, காலம் விளைந்தது என்பவை வழக்குகள் கோடை என்பது மேல்காற்று வீசும் வறண்ட காலம். அந்நாளில் விளைவன கோடைச் சோளம், கோடைச் சம்பாநெல் எனப்படும். 'கோடை' ஆகு பெயராக இலக்கண நூல்களில் காணப்படும்.

குளிரால் ஆட வைக்கும் காலம் ‘ஆடை' எனவும், கொடு வெப்பக் காலம் ‘கோடை’ எனவும் வந்திருக்கலாம், “ஆனி, ஆடி மாதக் கொந்தலிலே குளிர் ஆடுகள் போல் கொடுகி நிற்போம்” என்பது கவிமணி பாடல்.

ஆய்ந்து ஓய்ந்து (ஆஞ்சு ஒஞ்சு):

ஆய்ந்து ஓய்ந்து

ஆராய்ந்து பார்த்து

ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து.

இதைச் செய்வேன்; அதைச் செய்வேன் எனப்பல பல வகையாய் ஆராய்ந்து பலபல செயல்களில் ஈடுபட்டுச் செய்த ஒருவன்,ஒன்றிலும் வெற்றி கொள்ள இயலாமல் ஒடுங்கிவிட்ட நிலையில் அவனை ‘ஆஞ்சு ஓஞ்சு' அடங்கி விட்டான் என்பர்.

வி

ஓய்தல் ஒன்றும் செய்யமுடியாமல் அமைந்து விடுதல்.

ஆயிற்று போயிற்று (ஆச்சு போச்சு)

ஆயிற்று

போயிற்று

செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய் தாயிற்று.

என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று.

உள்ளுக்கும் வெளிக்குமாக உயிர் ஊசாலாடிக் க் காண்டிருக்கும் வேளையில் நாடியிருக்கிறதா? பால் இறங்கு கிறதா? ஆள் குறிப்புத் தெரிகிறதா? எனப் பலவாறாக ஆய்ந்து பார்ப்பது வழக்கம். உயிர் உள்ளேயா வெளியேயா என்பது தெரியாமல் உற்றார் உறவுகள் திகைப்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் “என்ன நிலையில் இருக்கிறது?” என்பார்க்கு ‘ஆச்சு போச்சு' என்று கிடக்கிறது என்பர். ‘எல்லாரும் சமமென்பது உறுதியாச்சு' என்பது போல ஆச்சு போச்சு என்பவை இலக்கிய வழக்கும் பெறலாயின.