பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

ஆல்பூல் ஆல

பூல்

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

ஆலமரம்

பூலாஞ் செடி

2

ஆல் என்றால் பூல் என்கிறான்" என்பது பழமொழி. ஆல் பூல் என்பவை பெயரளவால் ஒத்துத் தோன்றுபவை. ஆனால் எத்தகைய ஒப்புமையும் சுட்டிச் சொல்ல இல்லாதவை. ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாததை ஒப்பிதமாகக் கூறுவாரை “ஆல் என்றால் பூல் என்பான்” என்பர்.

66

ஆலும் வேலும் பல்லுக்குறுதி” “பூலுக்குப் போகம் பொழியுமே” வை பல் துலக்குதற்கு ஆகும் குச்சிகளைத்

தருவன.

ஆளும் பேரும் ஆள்

பேர்

நிமிர்ந்த அல்லது முழுத்த ஆள்

ஆள் என்று பெயர் சொல்லத் தக்க சிறார் அல்லது இளைஞர்.

பெரிய தூணையோ தடியையோ தூக்க வேண்டிய போது பெரிய ஆள்களின் எண்ணிக்கை குறைந்திருக்குமானால் சிறுவர்களையும் சேர்ந்து பிடிக்குமாறு கூறுவர். அந்நிலையில் ஆளும் பேருமாகப் பிடியுங்கள்' என்பர்.

ஒத்த ஆட்டக்காரர்களைப் பிரித்து ஆடும் ஆட்டத்திற்கு ஒருவர் இருவர் குறைவரானால், 'ஒப்புக்குச் சப்பாணி' என இணையாக அமர்த்திக்கொண்டு ஆடும் வழக்கத்தை-இதனுடன் ஒப்பிட்டுக் காணலாம். 'உப்புக்குச் சப்பாணி' என வழங்கு கின்றது.

ஆள், பேர், புள்ளி, தலை என்பவை பொதுவில் ஆள்களைக் குறிக்குமாயினும் இவண் பொது நீங்கி,பேர் என்பது பேருக்கு ஆளாக இருக்கும் சிறாரைக் குறித்ததாம்.

ஆறுதல் தேறுதல்

ஆறுதல்

தேறுதல்

மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.

ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல்.