பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த

உறவு

இணைச்சொல் அகராதி

கொண்டும் கொடுத்தும் உறவு ஆயவர், உறவு.

43

தாய் தந்தை உடன் பிறந்தார் மக்கள் என்பார் ஒட்டு ஆவர். கொண்டு கொடுத்த வகையால் நெருக்கமாவார் உறவு ஆவர். னி ‘உற்றார் உறவு' என்பதில் உற்றார் எனப்படுவார் ஒட்டு என்க. 'கேளும் கிளையும்' என்பதிலும் கேள் என்பது ஒட்டையும், கிளை என்பது உறவையும் குறிக்கும்.

ஒரு வேரில் இருந்து நீர் பெறும் மரம் செடிகள் ‘ஒட்டு’ எனப்பெறல் அறிக. ஒட்டார்-பகைவர் எனப்படுவார். 'உற்றார் உறவு’ காண்க.

ஓடை உடைப்பு:

ஓடை

உடைப்பு

- நிலத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் நீரால் அமைந்த ஓடுகால் அல்லது பள்ளம்.

ஓடையின் கரை நிலம் உடைப்பெடுத்துப் பள்ள மாவது.

நீர் ஓட்டத்தால் அமைந்தது ஓடை; நீர்ப்பெருக்கெடுத்து உடைதலால் அமைந்தது உடைப்பு. ஓடை - பள்ளம் என்னும் பொருளில், யானையின் நெற்றிப் பள்ளத்தை ‘ஓடை' என்பதாயிற்று.

உடைதல் மனம் உடைதல், படை உடைதல் முதலிய உடைதலுக்கும் விரிந்தது.

ஒண்டுக்குடி ஒட்டுக்குடி

ஒண்டு (ஒன்று)க்குடி- வீட்டோடு வீடாக வைத்துக் கொண்டுள்ள

ஒட்டுக்குடி

குடும்பம் ஒண்டுக்குடி.

வீட்டுக்கு அப்பால்,

ஆனால் வீட்டு

எல்லைக்குள் தனியே வைக்கப்பட்டுள்ள

குடும்பம் ஒட்டுக்குடி

ஒன்றாகிய குடும்பத்தின் சமையல் வரவு செலவு முதலியவை எல்லாம்ஒன்றானவை.ஒனர்டுக்குடிஒட்டுக்குடியில் அவையெல்லாம் தனித்தனியானவை. ஆனால் வீட்டு எல்லைக்குள் இருத்தல் என்னும் இ -நெருக்கம் மட்டுமே ஒரு வீட்டுத்தன்மை குறிப்பதாம். ஒண்ணடி மண்ணடி:(ஒண்ணடி-ஒன்றடி)

ஒண்ணடி ஒன்று