பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ் வளம் – 2 2

நாடு என்று தேடி ஆடு மேய்த்துத் திரிவார் மழைக்கு ஒதுங்குமிடம் குடிலாகவே இருக்கும். குடிலினும் நிலையானது குச்சு எனப்படும் குடிசை. இவற்றுக்கும் வகையில்லாதவர் தம்மை நொந்து “வீடுவாசல் வேண்டாம்; கூடும் குச்சுமாவது வேண்டாமா? என்று ஏங்குவர்.

கூடும் குடும்பமும்

கூடு

குடும்பம்

வீடு

மக்கள்

கூடும் குடும்பமுமாக இருக்கிறார்கள்' என்பர். மக்கள் பங்கு பிரித்து அயல் அயலே தனி வீட்டுக்குப் போகாமல் ஓரிடத்தில் அமைந்து வாழ்தலையும் ஒரு சமையலில் உண்பதையும் ‘கூடும் குடும்பமும்' என்றும், 'கூடும் குடித்தனமும்' என்றும் கூறுவர்.

கூடும் குடித்தனமும் பற்றிக் கருதுவதற்கு நத்தை சான்றாம். கூண்டு வண்டி போலச் செல்லும் அதன் செலவும், இணைவந்து சேருங்கால் ஒன்றாய் உருண்டு திரளும் கூடும் குடித்தனத்திற்குச் சீரிய ஒப்புமை.

கூனல் குறுகல்

கூனல்

குறுகல்

வளைவானது

வளைவுடன் குட்டையும் ஆகிப் போனது.

வயது செல்லச் செல்லக் கூனல் குறுகல் வரும். அதுவும் வளர்த்தி மிக்கவர்க்கே கூனலும் குறுகலும் மிகுதி. முதற்கண் முதுகு வளையும். பின்னர் அவ்வளவை மிகுந்து மிகுந்து உடல் குறுகிப் போகும் நிலையுண்டாம். இடுப்பு மட்டத்திற்கு மார்பு குனிந்து தலை நிமிர்த்தப் பாடுபட்டு நடப்பார் உண்மை கண்கூடு. கூனி என்பதோர் உயிரி. இறைவைச் சாலைக் கூனை என்பதும் உண்டு. 'கூனைகுடம் குண்டுசட்டி' முதலியவை ஒட்டக் கூத்தர் கதையில் வரும்.

கேள்வி முறை

கேள்வி

முறை

இடித்துக் கேள்வி கேட்டல்

அறமுறை இதுவெனக் கூறல்.

“கேள்வி முறை இல்லையா?” என்று முறை கேடான துயருக்கு ஆட்பட்டவர் கூறுதல் உண்டு. “எப்படி இதை நீ செய்யலாம்?”