பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தனிப்பாடல் கனிச்சுவை

தனிப்பாடல் திரட்டு பல்லாயிரம் பாடல்களையுடையது. அப்பாடல்களில் வெண்பா முதலிய எல்லாப் பாடல்களும் உண்டு. பழம் புலவர்கள் முதல் இந்நாள் புலவர்கள் வரையுள்ளவர் பாடிய பாடல் கள் உண்டு.

-

L

வெண்பா என்னும் ஒருவகைப் பாடல் மட்டுமே இத் தொகுப்பில் இடம் பெற்றுள. ஒளவையார் முதலாக இடைக் கால பிற்காலப் புலவர்கள் பாடல்கள் அவை தோன்றிய சூழ்நிலையொடு கூறப்பட்டுள. பாடல்கள் பற்றிய விளக்கம் - தோன்றிய வகை - அதன் பொருள் என்பவற்றை முறையே கூறி அதன்பின் பாடல் கூறப் பட்டமையால் பொருள் இயல்பாக விளங் கும். பாடலில் அருஞ்சொற்கள் இடம் பெற்றிருந்தால் அவற்றின் பொருளும் நிறைவில் கூறப்பட்டுள்ளது.

இப்பாடல்கள் ஒரு பாட்டொடு இன்னொரு பாட்டு, தொடர்தல் இல்லா மல் முடியும் தனிப் பாடல்கள் ஆகும். சிலேடைப் பாடல் (இரட்டுறல்), வினா விடைப் பாடல், (எடுப்பும் முடிப்பும்) முதலியவை தனித் தனியே வரும் ஆதலின் அப்பாடல்கள் இவண் சேர்க்கப் பட்டில.

நம்முன்னவர்கள் வரலாறு, நிகழ்ச்சி, தமிழ்வளம், பாநலம், இலக்கியப் பயிற்சி, இலக்கிய நுகர்ச்சி என்பவற்றைத் தொடக்கக் கல்வியினரும் அறியும் எண்ணத்தில் தொகுக்கப்பட்டது இத் தொகையாகும். இதனை வெளியிடும் மாணவர் பதிப்பகம் நன்றிக்குரியது.

அன்புடன்,

இரா. இளங்குமரன்.