பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

10. செல்வம்

செல்வம் ஓரிடத்திலே முடங்கிக் கிடவாமல் செலவும் வரவுமாக இருத்தல் வேண்டும். அதுவே செல்வப்பயன் ஆகும். ஒரு காசோ தாளோ செல்லுமா, செல்லாதா என்று பார்க்கும் வழக்கத்தை அறிந்தால் அதன் செல்லுதல் பொருள் விளங்கும்.

-

-

செல்லும் பொருள் நல்ல வழிக்குச் செல்ல வேண்டும். கொடுப்பவர்க்கும் பெறுபவர்க்கும் நலமாய் இன்பமாய் - வளர்ச்சியாய் வாழ்வாய் அமையும் செல்வமே சிறந்த செல்வம். அவ்வாறு செலவிடாச் செல்வமும் செல்லத்தான் செய்யும்! எப்படிச் செல்லும்? எவர்க்குச் செல்லும்?

நன்மைக்குப் பயன்படாத செல்வம், தீமைக்கே தந்தோ பறித்தோ அழிந்தோ போகவே செய்யும். ஆதலால் நன்மைக்கே பயன்படுத்துதல் செல்வர்களின் கடமை என்று பாடினார் ஒளவையார்.

“நம்பன் அடியார்க்கு நல்காத் திரவியங்கள்

பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம்

வம்புக்காம்

கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம் கள்ளர்க்காம் தீக்காகும் காண்’

என்பது அப்பாடல்

நம்பன் அடியார் - இறையடியார்; நம்பிக்கைக்குரிய நல்லோர். நல்கல் - கொடுத்தல்.

-

திரவியம் - செல்வம். பம்புக்கு - புதைப்புக்கு. பரத்தை யர் - கட்டமையாத இயல்பினர். கோ - அரசு(பறித்துக் கொள்ள).