பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

12. உடனே சொல்லுக

நாடி பார்த்து மருந்து வழங்குதல் சித்த மருத்துவச் சிறப்பாகும். நாடித் துடிப்பைக் கையைப் பிடித்துப் பார்த்து நோய் நிலை அறிவதால் 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்' என நாடி என்னும் சொல் பன்முறை வரப் பாடினார் திருவள்ளுவர்.

நாடிகள் மூன்றாகும். வளி(வாதம்) பித்தம் கோழை (சிலேத்துமம்) என்பவை அவை. வளி அடங்கின் ஒரு நாளிலும், பித்தம் அடங்கின் ஒரு நாழிகையிலும் (24 நிமிடம்), கோழை அடங்கின் ஒரு நிமிடத்திலும் உயிர் போகும். தொல்லை இல்லாத சாவு உடனே வருவதாம். அதுபோல் இல்லை என்பதுவும் உடனேயே சொல்லி விடுதல் நல்லது எனச் சொல்லும் வகையில் சொன் னார் ஒளவையார். அது,

66

‘வாதக்கோன் நாளையென்றான்; மற்றைக்கோன் பின்னையென்றான்; ஏதக்கோன் ஏதேனும் இல்லையென்றான் - ஓதக்கேள்

வாதக்கோன் சொல்லதினும் மற்றைக்கோன் சொல்லதினும் ஏதக்கோன் சொல்லே இனிது'

என்பது.

கோன் – தலைவன். நாடி,ஏதம் - துயர். கொடுக்கவோ செய்யவோ முடியாது என்றால்

காலம் கடத்தாமல் உடனே சொல்லி விடல் நன்று என்பது இது