பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

115

13. வீணானவை

பயன் செய்பவை, பயன் செய்யாதவை என எந்தப் பொருளிலும் செயலிலும் உண்டு. அவற்றைப் பற்றி எண்ணிய ஔவையார் இவை இவை வீணானவை எனக் குறிப்பிடுகிறார்.

உழவன் என்றால் மாடு இருக்க வேண்டும்; மாடு இல்லாத உழவன் வாழ்வு பயன்செய்யாது.

வணிகம் செய்வானுக்கு நல்ல அறிவு வேண்டும்; அறிவில்லாதவன் வணிகம் பயன் செய்யாது.

ஆட்சி நடத்துபவன் என்றால் நல்ல நாடு இருக்க வேண்டும்; நல்ல நாடு இல்லாதவன் ஆட்சி ஆட்சி ஆகாது. கல்வி என்றால் கற்பிக்கும் ஆசிரியன் வேண்டும்; கற்பிப்பவன் இல்லாத கல்வி பயன் செய்யாது. குடும்பம் என்றால் குணமிக்க பெண் இருத்தல் வேண்டும்; குணமில்லாப் பெண், குடும்பப் பயன் செய்யாள். வீடு என்றால் விருந்தோம்பல் வேண்டும்; விருந்து செய்தலில்லாவீடு பயனாகாது. இக்கருத்துடைய ய

பாடல்:

“மாடில்லான் வாழ்வு; மதியில்லான் வாணிகம்; நல் நாடில்லான் செங்கோல் நடாத்துவதும்; - கூடும் குருவில்லா வித்தை; குணமில்லாப் பெண்டு; விருந்தில்லா வீடும் விழல்”

மதி - அறிவு. செங்கோல் - ஆட்சி. குரு-ஆசிரியர். விழல் - வீண், பயனற்றது.