பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

117

15. போகின்றவை

கூடிவாழும் வாழ்வே மாந்தர் வாழ்வு. குடும்பம் சுற்றம் காள்ளல் கொடுத்தல் உற்றார் உறவு என்பனவெல்லாம் கொண்டதே கூட்டு வாழ்வு.

இவ்வாழ்வில் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வோர் கடமை உண்டு. அவர் இல்லா விட்டால் அவர் செய்யும் கட கடமை நிகழாமல் இழப்பு ஏற்பட்டு விடும். ஒருவர் இழப்பால் ஏற்படும் இழப்பு எது என்று ஔவையார் கூறுகிறார்.

தாயை இழந்தால் சுவையான உணவு வாயாது; தந்தையை இழந்தால் கல்வி சிறப்பு வாயாது; மகவை இழந்தால் தாம் பெற்ற செல்வம் பயன்படாது; நல்வாழ்வு உற்றார் உறவினர் இல்லை என்றால் வாயாது; உடன் பிறந்தார் போய்விட்டால் உற்ற பொழுதில் துணை இன்றிப் போகும்; மனைவி இல்லாமல் போனால் உள்ள எல்லாமும் இல்லாமல் போய்விடும் என்றார்.

"தாயோடு அறுசுவைபோம்; தந்தையோடு கல்விபோம்; சேயோடு தான் பெற்ற செல்வம்போம்; - ஆயவாழ்வு உற்றார் உடன்போம்; உடற் பிறப்பால் தோள்வலிபோம்; பொற்றாலி யோடெவையும் போம்."

அறு - ஆறு. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உறைப்பு, உப்பு, கசப்பு; சேய் மகவு. ஆய உண்டாகிய. வலி - வலிமை. தாலி - மனைவி. போம் - போகும்.