பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

123

21. உழவு இனிது

உழவுத் தொழில் ஓயாத் தொழில்; இரவும் பகலும் பார்க்கும் தொழில்; காலம் கருதாமல் கடினம் எண்ணாமல் குடும்பத்தோடு ஈடுபட்டுச் செய்யும் தொழில். வெயில், பனி, மழை எல்லாம் தாங்கிச் செய்யும் தொழில். ஆயினும் அத் தாழிலே உயிர் வாழ்வுக்கு மூலமாகிய உணவு வழங்கும் தொழில். அத் தொழில் சிறப்பானது என்று கொள்ள வேண்டும் என்றால், என்ன வேண்டும் என்பதை ஒளவையார் உரைத்தார்.

ஓர் ஏராக இல்லாமல் இரண்டு ஏர் இருக்க வேண்டும். விதைப்பஞ்சம் இல்லாமல் வீட்டில் விதை இருக்க வேண்டும். நீர்நிலைக்குப் பக்கமாக நிலம் இருக்க வேண்டும். அந்நிலமும் ஊர்க்குப் பக்கமாகவும் போய் வர எளிமையானதாகவும் ருக்கவேண்டும். இவற்றையுடைய உழவரைக் கேட்டால் அவர் தொழில் களில் உழவுத் தொழிலே இன்பமான தொழில் என்பார் என்பது அது. அப் பாடல்

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுளதாய் - ஊரருகே

சென்று வரஎளிதாய்ச் செய்வாரும் சொற்கேட்கில் என்றும் உழவே இனிது.

ஏர் – கலப்பை - 2, மாடு - 4. வித்து - விதை. செய்வார் - உழவு செய்வார்.