பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

125

23. ஓட்டைச்செவி

இந்நாள் கேரளம் முன்னாளில் சேரலம் எனப் பட்டது. அந்நாட்டில் ‘ஏழில்' என்பதோர் நாடு. அது ஒரு மலை நாடு. ஏழில் மலை எழில்மலை, எலிமலை எனப்பட்டு மூசிக பருவதம் எனவும் ஆயது.

6

ஏழில் நாட்டை ஆட்சி புரிந்த மன்னன் தமிழ் மன்னன். அவனை ஔவையார் போய்க்கண்டார். அவன் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. அவர் சொல்லுக்குச் செவி கொடுக்கவும் இல்லை. அதனால் அவருக்குத் தமிழை இழிவு படுத்தியதாகச் சினம் எழும்பியது.

ஏழிற் கோமானே, உன் கண் குருடும் அன்று; தெளிவு மிக்க பாட்டும் உரையும் கேட்கக் கூடிய செவியும் உனக்கில்லை. உன் செவி சொல்லைக் கேட்டறியா ஓட்டைச் செவி என்று பழித்தார். "இருள் தீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே! குருடேயும் அன்று நின் கொற்றம் - மருள் தீர்ந்த பாட்டும் உரையும் பயிலா தன இரண்டு ஓட்டைச் செவியும் உள”

என்றார்.

தீர் - நீங்கிய. கொற்றம் - அரசும் குருடு பட்டு விட்டது கண்ணைப் போல். மருள் - மயக்கம். பயிலுதல் - பழகுதல், கேட்டறிதல்.