பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

40. பெற்றவர் பெருமை

வசைபாடுதலில் வல்லவர் காளமேகர். கும்பகோணத்திற்குப் போன அவர் ஒரு விருந்திலே கலந்து கொண்டார். அவருக்குப் பக்கத்தில் முன்குடுமிக்காரன் ஒருவன் இருந்து உண்டான். அவன் குனிந்து நிமிரும் போது குடுமியின் முடிச்சு அவிழ்ந்து விட்டது. ஆயினும் அவன் குனியவும் நிமிரவுமாக-அவன் குடுமி யும் கீழும் மேலும் போக உண்டான். வேடிக்கை யாகப் பார்ப்பவர் இருந்தாலும் காளமேகருக்கு வேதனை யாக்கியது அவன் பக்கத்தில் இருந்து உண்டதும் அவன் சாப்பிட்ட முறையும் சலிப்பூட்டின. அவனைப் பெற்றவளையும் விடாமல் பழித்தார்.

பெற்றவர்க்குப் பெருமை சேர்க்கும் பிள்ளை களும் உளர். பெற்றவர்களுக்குச் சிறுமை சேர்ப்பவரும் உளர். எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது காளமேகர் பாட்டு.

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்தவாயா புலையா - திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே உனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய்.

தனை

சுருக்கு – முடிப்பு. சோழியன் - சோழ நாட்டான். பொருக்கு - பருக்கை. குடந்தை - கும்பகோணம். கோட்டான் – ஆந்தை. போட்டாள் – பெற்றாள் (தாய்).