பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

54. கலிங்கம்

இரட்டைப்புலவர்கள் மதுரைக்கு வந்தனர்; பொற்றாமரைக் குளத்தில் குளித்தனர். அப்பொழுது குருடராகிய புலவர் தம் உடையை நீரில் தோய்த்துத் தப்பினார். அவர் அதைத் தப்பி நீரில் அலசிக் கொண் டிருந்தபோது அவரை விட்டு ஆடை தப்பிப் போய் விட்டது. கரைமேல் இருந்த முடவராகிய புலவர், நீரில் தோய்த்து நாம் தப்பிக் கொண்டிருந்தால் அந்த ஆை நம்மை விட்டுத் தப்பாதோ?” என்றார். உடனே குருடர் இக் கலிங்கம் (இந்த ஆடை) போனால் என்ன? சொக்கலிங்கம் நமக்கு இருக்கிறார்' என்று பதில் கூறினார். இருவரும் பாதி பாதியாகப் பாடிய வெண்பா வருமாறு;

66

“அப்பிலே தோய்த்திட்(டு) அடுத்தடுத்து நாமதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில் இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்.'

அப்பு – நீர். புவியில் - உலகில். கலிங்கம் - ஆடை. ஏக லிங்கம் - ஒப்பற்ற லிங்கம். சொக்கலிங்கம் - மதுரையில் உள்ள இறைவன் திருப்பெயர்.