பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

58. எரியூட்டல்

முற்றுந் துறந்த துறவர் பட்டினத்தார். எல்லாவற்றையும் துறந்தாலும் தாயன்பைத் துறவாத தனிப் பெரும் துறவி அவர். ஒருநாள் தம் தாயார் இறந்த செய்தியைக் கேள்வியுற்று ஓடோடி வந்தார். ஆறாகப் பெருகியது கண்ணீர்; உள்ளம் உருகியது; தாயார் திருவுடலைக் கட்டையிற் கிடத்தித் தீ மூட்ட வேண்டிய னைச் செய்தார். தாய் உடலில் தீ மூட்டிய நிலையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்நிலையில் உள்ளம் வெதும்பிப் பல பாடல்கள் பாடினார். அவற்றுள் ஒரு பாட்டு

கட

66

‘அந்தோ! அன்னை முந்தித் தவங்கிடந்தார்; என்னை, முந்நூறு நாள் சுமந்தார்; இரவும் பகலும் இடைவிடாமல் றைவனை வழிபட்டார்; வயிறு சரியுமாறு சுமந்து இளைத்தார்; அவருக்கோ நான் தீ மூட்டுவேன்’

66

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்தே

அந்திபக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியுந் தழல்மூட்டு வேன்.”

அந்தி – இரவு. தழல் - தீ.