பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

163

61. முத்து

வெண்பாப் புலிக்கவிராயர் என்பவர் எட்டையபுரத்திற்குப் போயிருந்தார். அங்கிருந்த பெண்களின் பற்கள் மிகத் தூய்மையாகவும், அழகாகவும் இருந்தமை புலவரைக் கவர்ந்தது. அதனால் அப் பற்களைச் சிறப்பித்து ஒரு பாடல் பாடினார்.

தூது மதுரை, துவரை-கடை இடை முன் மூன்றெழுத்தை ஒக்கும் பற்கள்” என்றார்.

‘தூது’ என்பதில் கடைசி எழுத்து ‘து’. ‘மதுரை’ என்பதில் ை எழுத்து ‘து’. ‘துவரை” என்பதில் முன் எழுத்தும் ‘து’. 6 எத்தனை ‘து

வந்துள்ளதல்லவா!

66

வந்துள்ளன?

மூன்று ‘து’-முத்‘து’!

பற்கள் முத்துப்போல் உள்ளனவாம்!

தூதுமதுரை துவரை கடையிடை முன்

ஓதுகின்ற மூன்றெழுத்தை ஒக்குமே - நீதி செகராச ராசர்கள்தம் சிங்கே(று) இளசை நகரார் இளையர் நகை.

செகராசராசர்

உலகிலுள்ள பேரரசர்கள். சிங்கஏறு ஆண் சிங்கம். இளசை

எட்டையபுரம். நகர் ஆர் இளையார் - நகரிலுள்ள அழகிய இளம் பெண்கள். நகை – பல்.