பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

64. கோடி

பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை மடத்தில் உறைந்தார். அவர்க்கு உடை வேண்டியிருந்தது. மடத்தின் தலைவராக இருந்தவர் சுப்பிரமணிய தேசிகர். அவரிடம் தம் விழைவைக் கூறினார். அஃது ஒரு பாட்டாகவே வெளிப்பட்டது.

புத்துடையைக் ‘கோடி’ என்பது வழக்கம். ஓர் ஆடை என்றாலும் அதுகோடி ஆடை அல்லவா! அதனால் “ஒன்றைத் தந்தாலே கோடி என்று மகிழ்ச்சி கொள்வேன்; எனக்குக் கோடி தந்தால் எவ்வாறு மகிழ்வேனோ?" என்று தம் கவித்திறனும் நன்றி யுணர்வும் ஒருங்கே தோன்றப் பாடினார்.

66

'ஒன்றளித்தால் கோடியென உன்னுவேற்குக் கோடி

இன்றளித்தால் என்னவென எண்ணுவனோ - நன்றுணர்வாய் வண்ணமா டத்துறைசை வாழ்சுப் பிரமணிய

அண்ணலே இன்னே அருள்.

கோடி - ஓர் எண்; புத்துடை. துறைசை – திருவாவடு துறை. வண்ணமாடம் - அழகிய மாடம். இன்னே - இப்பொழுதே. அருள் - வழங்குவாயாக.